முக்கிய வசதி ஒன்றினை அதிரடியாக நீக்கியது கூகுள்

Report Print Givitharan Givitharan in ஏனைய தொழிநுட்பம்
0Shares
0Shares
lankasrimarket.com

இணைய ஜாம்பவான் ஆன கூகுள் தகவல்கள் உட்பட வீடியோ, படங்கள் என்பவற்றினை தேடும் வசதியினையும் தருகின்றமை தெரிந்ததே.

இந்நிலையில் புகைப்படங்களை தேடுதலில் தரப்பட்டிருந்த வசதி ஒன்றினை திடீரென நீக்கியுள்ளது.

அதாவது View Image எனும் வசதி ஊடாக குறித்த புகைப்படத்தினை புதிய டேப்பில் திறக்க வைப்பதுடன் தரவிறக்கம் செய்யும் வசதியும் தரப்பட்டிருந்தது.

எனினும் தற்போது இவ் வசதி நீக்கப்பட்டுள்ளது.

இவ் வசதியின் ஊடாக கூகுள் தளத்திலிருந்தே படங்களை தரவிறக்கம் செய்ய முடியும்.

இவ்வாறு செய்வதனால் குறித்த படங்களை தரவேற்றம் செய்தவர்களது தனியுரிமை மீறப்படுவதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

இதனை அடுத்தே இவ் வசதி கூகுள் நிறுவனத்தினால் நீக்கப்பட்டுள்ளது.

மேலும் ஏனைய தொழிநுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்