Ring நிறுவனத்தினை கொள்வனவு செய்கின்றது அமேஷான்

Report Print Givitharan Givitharan in ஏனைய தொழிநுட்பம்
0Shares
0Shares
lankasrimarket.com

ஸ்மார்ட் தொழில்நுட்பத்தினைக் கொண்ட டோர் பெல்லினை Ring எனும் நிறுவனம் அண்மையில் அறிமுகம் செய்திருந்தது.

இந்த பெல் ஆனது ஒருவர் வீட்டில் இருக்கும்போதோ அல்லது வெளியே சென்றிருக்கும்போதோ வீட்டிற்கு வரும் விருந்தினர்களுக்கு பதிலளிக்கக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இவ்வாறான பெல்லினை உருவாக்கிய Ring நிறுவனம் தற்போது தனது முதலீட்டினை 209 மில்லியன் டொலர்களாக உயர்த்தியுள்ளது.

இந்நிலையில் இந்த நிறுவனத்தினை வாங்குவதற்கு அமேஷான் நிறுவனம் முன்வந்துள்ளது.

இதற்காக ஒரு பில்லியன் டொலர்கள் பேரம் பேசப்பட்டுள்ளது.

கொள்வனவு செய்யப்பட்ட பின்னர் டோர் பெல் சாதனமானது அமேஷானின் அலெக்ஸா சாதனத்துடன் இணைத்து செயற்பட வைக்கப்படும் என தெரிகின்றது.

மேலும் ஏனைய தொழிநுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்