வருகிறது புதிய வகை மின்கலம்: 30 செக்கனில் முழுமையாக சார்ஜ் செய்யலாம்

Report Print Givitharan Givitharan in ஏனைய தொழிநுட்பம்
0Shares
0Shares
lankasrimarket.com

தற்போது பாவனையில் உள்ள மின்கலங்களை சார்ஜ் செய்வதற்கு மணித்தியாலக் கணக்கில் நேரம் செலவாகின்றது.

இப் பிரச்சினைக் தீர்வு காண்பதற்காக பல்வேறு ஆராய்ச்சிகள் இடம்பெற்று வருகின்றன.

இவ்வாறான நிலையில் வெறும் 20 செக்கன்களில் மின்கலத்தினை முழுமையாக சார்ஜ் செய்யக்கூடிய தொழில்நுட்பம் உருவாக்கப்பட்டுள்ளது.

இதற்காக மின்கலங்களில் பயன்படுத்தக்கூடிய Aqueous Hybrid Capacitor (AHC) எனும் கொள்ளளவில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதனை Korea Advanced Institute of Science and Technology (KAIST) ஐ சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளனர்.

மின்கலம் மற்றும் கொள்ளளவி என்பன மின்வாய்களுடன் இணைக்கப்பட்டு உருவாக்கப்பட்டுள்ளது.

இதில் கலக்கப்பட்டுள்ள கரைசல் ஆனது மின்சாரத்தினை கடத்துவதற்கு உதவுகின்றது.

மேலும் இம் மின்கலமானது முன்னைய மின் கலங்களை விடவும் 100 மடங்கு சக்தியை தரக்கூடியதாக இருப்பதுடன் சுமார் 100,000 தடவைகள் மீண்டும் மீண்டும் சார்ஜ் செய்து பயன்படுத்தக்கூடியதாகவும் இருக்கின்றது.

மேலும் ஏனைய தொழிநுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்