சர்வதேச விண்வெளி நிலையத்தினுள் நுழையும் புதிய ரோபோ

Report Print Givitharan Givitharan in ஏனைய தொழிநுட்பம்
0Shares
0Shares
lankasrimarket.com

விண்வெளியில் காணப்படும் சர்வதேச விண்வெளி நிலையத்தில் உள்ள விண்வெளி வீரர்களுக்கு உதவுவதற்காக புதிய ரோபோ ஒன்று அனுப்பி வைக்கப்படவுள்ளது.

CIMON அல்லது Crew Interactive Mobile CompanioN என குறித்த ரோபோவிற்கு பெயரிடப்பட்டுள்ளது.

இந்த ரோபோ எவ்விதமான உதவியும் இன்றி தானாகவே அந்தரத்தில் மிதந்து நகரக்கூடியவாறு வடிவமைக்கப்பட்டுள்ளது.

வெறும் 5 கிலோ கிராம்களே எடைகொண்ட இந்த ரோபோ எதிர்வரும் ஜுன் மாதத்தில் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது.

ஜேர்மனியை சேர்ந்த விண்வெளி நிறுவனம் ஒன்றே குறித்த ரோபோவினை வடிவமைத்துள்ளது.

மேலும் இந்த ரோபோ செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தினை அடிப்படையாகக் கொண்டு முடிவுகளை எடுக்கக்கூடியதாகவும் இருக்கின்றது.

மேலும் ஏனைய தொழிநுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்