மழையிலும் மின்சாரம் தரும் ஹைப்பிரிட் சோலார் கலம் உருவாக்கம்

Report Print Givitharan Givitharan in ஏனைய தொழிநுட்பம்
0Shares
0Shares
lankasrimarket.com

சூரிய ஒளியைப் பயன்படுத்தி மின்சாரத்தினை உற்பத்தி செய்யக்கூடிய சோலார் கலங்களே தற்போது பாவனையில் உள்ளன.

மழை காலங்களில் இவற்றிலிருந்து மின்சாரத்தினை பெற முடியாது.

ஆனால் தற்போது விஞ்ஞானிகள் அதனையும் சாத்தியமாக்கியுள்ளனர்.

அதாவது சூரிய ஒளியை மாத்திரமன்றி மழைத்துளிகளைக் கூட மின்சாரமாக மாற்றக்கூடிய ஹைப்பிரிட் சோலார் கலங்களை உருவாக்கியுள்ளனர்.

இதற்காக Triboelectric Nanogenerator அல்லது TENG எனப்படும் இரு பொருட்களை தேய்ப்பதன் ஊடாக மின்சாரத்தினை உற்பத்தி செய்யும் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது.

இச் சோலார் கலத்தினை சீனாவிலுள்ள Soochow பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகளே வெளியிட்டுள்ளனர்.

இக் கலத்தில் வெள்ளி, சிலிக்கன் மற்றும் அலுமினியம் போன்ற மூலகங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

மேலும் ஏனைய தொழிநுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்