மிகப்பெரிய iOS அப்டேட்டினை அறிமுகம் செய்தது ஆப்பிள்

Report Print Givitharan Givitharan in ஏனைய தொழிநுட்பம்
0Shares
0Shares
Cineulagam.com

ஆப்பிள் நிறுவனம் தனது மொபைல் சாதனங்களுக்காக இறுதியாக iOS 11 எனும் இயங்கு தளத்தினை அறிமுகம் செய்திருந்தது.

இவ் இயங்குதளத்திற்கான இரு அப்டேட்களை ஏற்கணவே அறிமுகம் செய்தும் இருந்தது.

இந்நிலையில் தற்போது மூன்றாவது அப்டேட்டாக iOS 11.3 வெளியிடப்பட்டுள்ளது.

இது முன்னர் அறிமுகம் செய்யப்பட்டிருந்த அப்டேட்களை காட்டிலும் பெரிதாக காணப்படுகின்றது.

இதில் நான்கு புதிய அனிமோஜிக்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

மேலும் மின்கலம் பற்றிய மேலும் பல தகவல்களை இந்த அப்டேட் காண்பிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் ஊடாக மின்கலப் பாவனைக் காலத்தினை அதிகரிக்க முடியும்.

Settings > General > Software Update எனும் பகுதிக்கு செல்வதன் ஊடாக ஐபோன் மற்றும் ஐபேட்களில் இப் புதிய பதிப்பினை அப்டேட் செய்துகொள்ள முடியும்.

மேலும் ஏனைய தொழிநுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்