பேஸ்புக் தகவல் திருட்டிலிருந்து பயனர்களை பாதுகாக்க புதிய மென்பொருள்

Report Print Givitharan Givitharan in ஏனைய தொழிநுட்பம்
0Shares
0Shares
lankasrimarket.com

பேஸ்புக் தகவல் திருட்டானது இன்று உலகளவில் பேசுபொருளாக மாறிவிட்டது.

இப் பிரச்சினைக்கு தீர்வினை வழங்குவதற்கு பல்வேறு இணைய நிறுவனங்களும் ஆர்வம்காட்டி வருகின்றன.

இந்நிலையில் பையர்பாக்ஸ் இணைய உலாவியினை வடிவமைத்து அறிமுகம் செய்த மொஸில்லா நிறுவனம் ஆறுதல் தரும் ஒரு அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.

இதன்படி பையர்பாக்ஸ் உலாவிக்கான ஒரு நீட்சி அறிமுகம் செய்யப்படவுள்ளது.

Facebook Container எனும் இந்த நீட்சியானது பேஸ்புக்கின் ஊடாக உளவுபார்க்கும்போது எச்சரிக்கை செய்யும்.

குறித்த நீட்சியினை உருவாக்குவதற்கான பணிகள் இரண்டு வருடங்களுக்கு முன்னரே ஆரம்பிக்கப்பட்டிருந்தன.

எனினும் இந்த நீட்சியின் தேவை தற்போது உணரப்பட்டுள்ள நிலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

மேலும் ஏனைய தொழிநுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்