ஹெட்போன்களால் 110 கோடி பேர் செவித்திறன் பாதிப்பு: எச்சரிக்கை தகவல்

Report Print Athavan in ஏனைய தொழிநுட்பம்
0Shares
0Shares
Cineulagam.com

உலகம் முழுதும் 110 கோடி பேர் ஹெட் போன்களால் பாதிப்புக்கு உள்ளானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாடல்கள் கேட்பவரின் எண்ணிக்கை கூடுமே தவிர குறைவதேயில்லை. அந்தந்தக் காலங்களுக்கேட்ப அவரவர் தொழில்நுட்பத்தில் பாடல்கள் கேட்டு வந்திருக்கிறோம்.

தற்போதைய தொழில்நுட்பத்தின் உதவியால் ஒருவரையொருவர் தொந்தரவு செய்யாத வகையில் ஹெட் போன்களில் பாட்டுக் கேட்கும் வழக்கம் அதிகரித்து வந்திருக்கிறது.

தாங்கள் பயணிக்கும் தூரத்தின் பாரதத்தைக் குறைக்கவும் இயர் போன்களைப் பயன்படுத்தி பாடல்கள் கேட்கும் வழக்கம் பெரும்பலானரிடையே உண்டு.

இப்படி ஆசையைக் கேட்கும் ஹெட்போன்களே நமக்கு ஆபத்து விளைவிக்கிறது என்றால் கவனிக்க வேண்டும்தானே.

அதிக வால்யும் வைத்துக் கேட்கப்படும்போது செவித்திறன் குறையும் எனப் பல ஆண்டுகளாகவே சொல்லி வந்த நிலையில் உலக சுகாதார நிறுவனம் மற்றுமொரு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்த அறிக்கை படி பாதுகாப்பற்ற ஹெட் போன்களைப் பயன்படுத்துவதன் மூலம் 110 கோடி இளைஞர்களின் செவித்திறன் பாதிக்கப்பட்டதாக கண்டறியப்பட்டுள்ளது.

இதில் 12-35 வயதானவர்களே அதிகம் பாதிகப்பட்டுள்ளதாக சொல்லப்பட்டிருக்கிறது. இது 2015 ஆம் ஆண்டிற்கான அறிக்கை.

ஹெட் போனில் அதிகமானவோல்யுமில் தொடர்ந்து ஒரு மணி நேரம் கேட்டுக் கொண்டிருந்தால் செவித்திறன் பாதியளவு குறைவதை உணர முடியும்.

ஒரு மணிநேரத்திற்கு 85 டெசிபெல் அளவிலும் 15 நிமிடத்திற்கு 100 டெசிபல் அளவிலும் பாடல்களை சத்தமாக வைத்துக் கேட்பதன் மூலமே காது தன் கேட்கும் திறனை இழந்து விடுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

தற்போது சந்தையில் விற்கப்படும் ஹெட் போன்கள் எல்லாம் 120 டெசிபல் வகையை சார்ந்தவை என்கிறனர் இவர்கள்.

பிராண்டட் நிறுவனங்களின் தயாரிப்புகளையே அதிக வோல்யுமில் கேட்கக் கூடாது என்று கூறி வரும்போது மலிவான விலையில் விற்கப்படும் இவைகளின் தரம் பற்றி உணராமல் பெரும்பாலானோர் பயன்படுத்தி வருகின்றனர் என்பது கவலைக்குரிய விஷயம்.

மொத்தத்தில் சரியான முறையில் பயன்படுத்த தெரியாவிட்டால் ஹெட் போன்களுக்கு பதிலாக ஹியரிங் எயிட் போனைப் பயன்படுத்த வேண்டி வரலாம் என இந்த எச்சரிக்கை நமக்கு அறிவுறுத்துகிறது.

மேலும் ஏனைய தொழிநுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்