தலைப்பகுதியை புதுப்பிக்க காலில் உள்ள மரபணுக்களை பயன்படுத்தும் உயிரினங்கள்

Report Print Givitharan Givitharan in ஏனைய தொழிநுட்பம்
0Shares
0Shares
lankasri.com

Wisconsin-Madison பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த Emily Setton மற்றும் Prashant Sharma ஆகியோர் சிலந்தி மற்றும் தேள் தொடர்பில் மேற்கொண்ட ஆய்வில் புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

அதாவது இவ் இரு உயிரினங்களும் தமது துண்டிக்கப்பட்ட தலைப் பகுதியினை புதுப்பிக்க கால் பகுதியில் உள்ள மரபணுக்களை பயன்படுத்துகின்றமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதற்காக Sp6-9, Dll ஆகிய மரபணுக்களை அவை பயன்படுத்துவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

எவ்வாறெனினும் இரு வேறு அங்கங்களை உருவாக்குவதற்கு ஒரே மரபணுக்கள் பயன்படுத்தப்பட்டுள்ள சந்தர்ப்பம் இதற்கு முன்னரும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஊர்வனவற்றின் தாடை என்பும், மனிதர்களின் காது என்பும் ஒரே வகையான மரபணுக்களால் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய தொழிநுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்