இன்ஸ்டாகிராமின் திடீர் முடிவு: அதிர்ச்சியில் ஆப்பிள் பயனர்கள்

Report Print Givitharan Givitharan in ஏனைய தொழிநுட்பம்
0Shares
0Shares
Cineulagam.com

புகைப்படங்களை பகிர உதவும் பிரபல சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராம் மொபைல் சாதனங்களுக்கான அப்பிளிக்கேஷனையும் வெளியிட்டுள்ளது.

இதன் புதிய பதிப்புக்கள் அவ்வப்போது அறிமுகம் செய்யப்படுவது வழக்கமாகும்.

இவ்வாறிருக்கையில் ஆப்பிளின் ஸமார்ட் கடிகாரத்தில் முதன் முதலாக அறிமுகம் செய்யப்பட்ட சமூக வலைத்தள ஆப்பிளிக்கேஷன்களுள் இன்ஸ்டாகிராமும் ஒன்றாகும்.

எனினும் அண்மையில் வெளியான புதிய பதிப்பினை ஆப்பிள் கடிகாரங்களில் பயன்படுத்த முடியாது உள்ளது.

காரணம் தெரிவிக்காமலேயே தனது அப்பிளிக்கேஷனை ஆப்பிளின் WatchOS இயங்குதளத்தில் செயற்படாதவாறு மாற்றியிமைத்துள்ளது.

இதேபோன்று Ebay, Amazon, Google Maps போன்ற ஆப்பிளிக்கேஷன்களும் ஆப்பிள் கடிகாரத்திற்கான பதிப்புக்களை நிறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய தொழிநுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்