குரல் வழி கட்டளையின்றி தொடர் பாடலை ஏற்படுத்தக்கூடிய ஹெட்செட் உருவாக்கம்

Report Print Givitharan Givitharan in ஏனைய தொழிநுட்பம்
42Shares
42Shares
lankasrimarket.com

MIT நிறுவனத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் புதிய வகை ஹெட்செட் ஒன்றினை உருவாக்கியுள்ளனர்.

இது ஹாண்ட் ப்ரீ (Hand Free) மற்றும் வொய்ஸ் ப்ரீ (Voice Free) தொழில்நுட்பத்தினைக் கொண்டுள்ளது.

அதாவது வாயினை அசைக்காமலேயே தொடர் பாடலை மேற்கொள்ளக்கூடியதாக இருத்தல் விசேட அம்சமாகும்.

AlterEgo எனும் இச் சாதனம் காது மற்றும் தாடையில் அணியக்கூடியவாறு வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த ஹெட்செட் மூலம் பெறப்பட்ட தரவுகளை முறைவாழியாக்கம் செய்வதுடன் மொழிபெயர்ப்பு செய்து துலக்கத்தைக் காட்டுகின்றது.

மூளையில் இருந்து தசைகளுக்கு அனுப்பப்படும் இலத்திரனியல் சமிக்ஞைகளை உணர்ந்தே இச் சாதனம் செயற்படுகின்றது.

குறித்த சாதனத்தின் செயற்பாட்டினை விளக்கும் வீடியோ ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது.

மேலும் ஏனைய தொழிநுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்