ஒலியை விட வேகமாக பயணம் செய்யக்கூடிய விமானங்களை சூப்பர் சோனிக் விமானங்கள் என அழைப்பார்கள்.
இவ்வாறான சிறப்பியல்பு கொண்ட விமானங்களை அமைப்பதில் நாசா விண்வெளி ஆய்வு மையமானது சிறந்த அனுபவத்தினைக் கொண்டுள்ளது.
இதன் அடிப்படையில் மிகவும் குறைந்த அளவு ஒலியை எழுப்பக்கூடிய சூப்பர் சோனிக் விமானத்தை வடிவமைக்க தீர்மானித்துள்ளது.
நாசா நிறுவனத்தின் விமானங்களை வடிவமைக்கும் துணைப் பகுதியான National Advisory Committee for Aeronautics (NACA) இவ் விமானத்தை வடிவமைக்கவுள்ளது.
இதனை உருவாக்கும் பணிகள் 2021ம் ஆண்டு தொடக்கம் 2025ம் ஆண்டு வரை மூன்று கட்டங்களாக மேற்கொள்ளப்படவுள்ளது.