தகவல்கள் திருட்டு: பேஸ்புக்கை தொடர்ந்து சர்ச்சையில் மாட்டியது யூடியூப்

Report Print Givitharan Givitharan in ஏனைய தொழிநுட்பம்
0Shares
0Shares
Cineulagam.com

முன்னணி வீடியோ பகிரும் தளமாக விளங்கும் யூடியூப் ஆனது சிறுவர்கள் தொடர்பான தனிப்பட்ட தகவல்களை திருடியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

23 சிறுவர்களின் தகவல் திருட்டு தொடர்பில் யூடியூப்பின் தாய் நிறுவனமான கூகுளிற்கு எதிராக US Federal Trade Commission, நுகர்வோர் மற்றும் தனியுரிமை தொடர்பான நிறுவனம் என்பன இணைந்து புகார் அளித்துள்ளன.

விளம்பரங்களின் ஊடாக 13 வயதிற்கும் குறைவான சிறார்களின் தகவல்கள் திருடப்பட்டுள்ளதாகவே குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இதேவேளை யூடியூப் இணையத்தளத்தினை பயன்படுத்தும் சிறுவர்களில் 80 சதவீதமானவர்கள் 6 வயதிற்கும் 12 வதிற்கும் இடைப்பட்டவர்கள் என புள்ளி விபரங்கள் சுட்டிக்காட்டுகின்றன.

மேலும் ஏனைய தொழிநுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்