ஜிமெயிலில் அறிமுகமாகவுள்ள Smart Compose வசதி பற்றி தெரியுமா?

Report Print Givitharan Givitharan in ஏனைய தொழிநுட்பம்
0Shares
0Shares
lankasrimarket.com

மின்னஞ்சல் சேவைகளுள் ஜிமெயில் சேவையானது தொடர்ந்தும் பல புதிய வசதிகளுடன் பயனர்களின் எண்ணிக்கையை அதிகரித்து வருகின்றது.

இவற்றின் வரிசையில் Smart Compose எனும் மற்றுமொரு புதிய வசதி விரைவில் அறிமுகம் செய்யப்படவுள்ளது.

இதன் மூலம் மின்னஞ்சலில் உள்ளீடு செய்ய வேண்டும் என பயனர் எண்ணும் உள்ளடக்கத்தினை தானாகவே உட்புகுத்தக்கூடியதாக இருக்கின்றது.

வருடாந்தம் இடம்பெறும் டெவெலொப்பர் மாநாட்டில் இந்த தகவலை கூகுள் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

எனினும் இச் சேவைக்கு பயனர் ஆரம்ப வசனத்தினை தட்டச்சு செய்ய வேண்டும். அதனைத் தொடர்ந்து தானாகவே குறித்த வசனம் பூர்த்தி செய்யப்படும்.

அடுத்து வரும் சில வாரங்களில் இவ் வசதி பயன்பாட்டிற்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஏனைய தொழிநுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்