புகைப்படங்களை மெருகூட்டும் அற்புதமான வசதி தற்போது கூகுள் போட்டோஸில்

Report Print Givitharan Givitharan in ஏனைய தொழிநுட்பம்
114Shares
114Shares
lankasrimarket.com

புகைப்படங்களை இலகுவாக சேமித்து வைப்பதற்கு கூகுள் போட்டோஸ் சேவையானது மிகவும் பயனுள்ளதாக காணப்படுகின்றது.

இதில் பல்வேறு எடிட்டிங் வசதிகளும் காணப்படுகின்றன.

இந்நிலையில் மற்றுமொரு புதிய வசதி உள்ளடக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி கறுப்பு வெள்ளை புகைப்படங்களை வர்ணப் புகைப்படங்களாக மாற்றி மெருகூட்டிக்கொள்ள முடியும்.

இதற்கு செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகின்றது.

அதேபோன்று புகைப்படங்களை PDF கோப்புக்களாக மாற்றியமைக்கும் வசதியும் உள்ளடக்கப்படவுள்ளது.

இவ் வசதிகள் அடுத்துவரும் இரு மாதங்களுக்குள் அறிமுகம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஏனைய தொழிநுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்