தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் நீச்சல் அடிக்கலாமா?

Report Print Printha in கர்ப்பம்
0Shares
0Shares
lankasrimarket.com

நீச்சல் ஒரு நல்ல உடற்பயிற்சியாக இருந்தாலும், குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள் நீச்சல் பயிற்சியை செய்வது சரியா? என்ற சந்தேகம் அனைத்து தாய்மார்களிடமும் உள்ளது.

தாய்மார்கள் நீச்சல் பயிற்சி செய்வது நல்லதா?

தாய்மார்கள் நீச்சல் குளத்தில் நீச்சல் அடிக்கும் போது, குளோரின் கலந்த அந்த நீரில் தாயின் முலைக்காம்புகள் வறண்டு விடும். இதனால் நீச்சலடித்த பின் தாய்மார்கள் மார்பகங்களை சுத்தமான நீரினால் நன்கு கழுவிய பின் குழந்தைக்கு பால் கொடுக்க வேண்டும். ஏனெனில் இதனால் குழந்தைக்கு நோய்த்தொற்றுகள் ஏற்படுவதை தடுக்கலாம்.

தாய்மார்கள் கவனத்தில் கொள்ள வேண்டியவை
  • ஆரோக்கியமான உணவை சாப்பிடுவதும், நலமுடன் இருப்பதுமே தாய்ப்பாலின் உற்பத்திக்கு காரணமாகும் என்பதை ஒவ்வொரு தாய்மார்களும் புரிந்து கொள்ள வேண்டும்.
  • தாய்மார்கள் குளிர்ந்த நீரில் நீச்சல் அடித்தால், அவர்கள் உடம்பில் இருக்கும் ஆக்ஸிடாஸின் அளவை குறைத்து, மன அழுத்தத்தை அதிகமாக்கி, பால் ஓட்டத்தை பாதித்துவிடும்.
நீச்சல் செய்வதால் தாய்ப்பாலின் சுவை மாறுமா?

தாய்மார்கள் நீச்சல் செய்வதால், பாலின் ருசி முற்றிலும் மாறிவிடும் என்பது தவறு. ஆனால் நீச்சல் போன்ற ஏராளமான உடற்பயிற்சிகள், லாக்டிக் அமிலத்தை சுரக்க செய்து, தாய்ப்பாலின் ருசியை சிறிதளவு மாற்றும் என்பது உண்மை.

குறிப்பு

குழந்தைக்கு பால் கொடுக்கும் தாய்மார்கள் டாக்டரின் ஆலோசனை இல்லாமல், நீச்சல் பயிற்சி மேற்கொள்வதை, முற்றிலும் தவிர்க்க வேண்டியது மிகவும் அவசியமாகும்.

மேலும் கர்ப்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments