கர்ப்ப காலத்தில் இந்த வீட்டு வேலையை மட்டும் செய்துவிடாதீர்கள்

Report Print Printha in கர்ப்பம்
0Shares
0Shares
lankasrimarket.com

ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடுவது, உடற்பயிற்சி செய்வது, மனதை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்வது இது போன்றவை கர்ப்பிணி பெண்களுக்கு மிகவும் அவசியமானது.

ஆனால் இதை தவிர, கர்ப்பகால பெண்கள் வீட்டில் உள்ள வேலைகள் அனைத்தையும் செய்வது மிகவும் ஆபத்தானது.

கர்ப்பிணி பெண்கள் செய்யக் கூடாத வீட்டு வேலைகள் என்ன?
  • கர்ப்பக்கால பெண்கள் வீட்டை துடைத்து சுத்தம் செய்யும் வேலையை செய்யக் கூடாது. ஏனெனில் அதற்கு பயன்படுத்தும் சோப்பு, ஆயில்கள் மற்றும் க்ளீனிங் பவுடர் போன்றவை அலர்ஜியை ஏற்படுத்திவிடும்.
  • கர்ப்பிணி பெண்கள் மிகவும் அதிகமாக வளைந்து செய்யும் வீட்டு வேலைகளை செய்யக் கூடாது. ஏனெனில் அது பெரிய ஆபத்தை உண்டாக்கும்.
  • கர்ப்ப காலத்தில் பெண்களின் மூட்டுகள் மற்றும் எலும்புகள் மிகவும் மிருதுவாக இருக்கும். எனவே அதிகமாக வேலை செய்யக் கூடாது.
  • குளியல் மற்றும் கழிப்பறைகளை சுத்தம் செய்ய பயன்படுத்தும் பொருட்கள் கர்ப்ப காலத்தில் மிகவும் ஆபத்தை விளைவிக்கும், எனவே இந்த வேலைகளை செய்யக் கூடாது.
  • கர்ப்ப காலத்தில் துணி துவைக்கும் வேலையை செய்யக் கூடாது. ஏனெனில் நீண்ட நேரம் குனிந்து துவைப்பதால், இடுப்பு வலியை ஏற்படுத்தும்.
  • கனமான பொருட்களை தூக்குவது, ஏணிகளில் ஏறுவது போன்ற வேலைகளை கர்ப்பிணிகள் செய்யக் கூடாது. ஏனெனில் அது முதுகு பகுதியில் ஆபத்தை ஏற்படுத்தும்.

மேலும் கர்ப்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments