தீராக்காதல் கொண்ட ஒபாமா

Report Print Deepthi Deepthi in உறவுமுறை
0Shares
0Shares
lankasri.com

8 ஆண்டுகள் அமெரிக்காவின் ஜனாதிபதியாக இருந்த ஒபாமா இன்று தனது 56 ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

ஒபாமா, அமெரிக்காவின் சிறந்த ஜனாதிபதி என்பது எந்த அளவுக்கு மக்கள் மனதில் பதிந்துள்ளதோ, அதே அளவுக்கு ஒபாமா ஒரு காதல் உணர்வுள்ள மனிதர் என்பது அந்நாட்டு மக்களுக்கு மட்டுமின்றி, உலக மக்களுக்கே தெரியும்.

பிற நாட்டு அரசியல் தலைவர்களுடன் ஒப்பிடுகையில், தனது மனைவியுடன் சேர்ந்து அதிகமாக ரொமாண்டிக் போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிடுவது, பொது இடங்களில் வைத்து தனது மனைவி மிச்செல் குறித்த காதல் வசனங்களை பேசுவது என காதல் விடயங்களில் சுதந்திரமாக உலா வரும் மனிதர்.

தனது மனைவியின் மீது எந்த அளவுக்கு தீராக்காதல் கொண்டுள்ளாரோ, அந்த அளவுக்கு தனது இரு மகள்களுக்கும் அன்பையும் அறிவையும் கற்றுக்கொடுத்து வளர்த்துள்ளார்.

ஒரு நாட்டின் ஜனாதிபதியாக இருந்த காலகட்டத்திலும் தனது காதலை வெளிப்படையாக தெரிவிக்க இவர் ஒருபோதும் தயங்கியதில்லை.

இன்று 56 ஆவது பிறந்த நாளை கொண்டாடும் ஒபாமா தனது மனைவியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இதோ,

மேலும் உறவுமுறை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments