ஒவ்வொரு நிமிடமும் அவன் எனக்குள்: மனம் திறந்த மைனா நந்தினி

Report Print Deepthi Deepthi in உறவுமுறை
0Shares
0Shares
lankasri.com

எனது கார்த்திக் இறந்துவிடவில்லை என்னோடு தான் இருக்கிறார் என தனது திருமண நாளின் நினைவுகளோடு தனது வாழ்க்கையை பகிர்ந்து கொண்டார் மைனா நந்தினி.

கடந்த ஏப்ரல் 4 ஆம் திகதி மைனா நந்தினியின் கணவர் கார்த்திக்கேயன் தற்கொலை செய்து கொண்டார்.

இவரது இறப்பிற்கு காரணமாக நந்தியினின் தந்தை மற்றும் நந்தினி தான் காரணம் என பல தகவல்கள் வெளியாகின.

ஜூன் 6 ஆம் திகதி தான் நந்தினி மற்றும் கார்த்திக்கின் முதலாவது திருமண நாள். அந்த திருமண நாளின் நினைவுகளோடு தனது காதல் கணவர் குறித்து நந்தினி கூறியதாவது, பொதுவா, கார்த்திக்கு வீட்ல சும்மா இருக்கிறது பிடிக்காது. நாங்க இரண்டு பேருமே பிஸியாக இருக்கணும்னுதான் சொல்லிட்டிருப்பான்.

வீட்டுக்குள்ள அடைஞ்சு கிடக்கிறது தப்புனு சொல்லுவான், அவனுக்குப் பிடிச்ச மாதிரி வாழணும்ங்கிறதுதான் என் ஆசையும்.

காதலிக்கும்போதும் சரி, கல்யாணமான பிறகும் சரி எனக்குனு ஆசையா ஒரு பொருள்கூட கார்த்தி வாங்கித் தந்ததில்லை.

ஒரு பொண்ணுக்கு இருக்கிற ஆசைகளைக்கூட நான் அனுபவிச்சது கிடையாது. ஆனா, அதற்கு ஈடான பாசத்தைக் காட்டினான்.

இப்பவும் கார்த்தி எங்கேயும் போயிடலை, என்னோடுதான் இருக்கான், ஒவ்வொரு நிமிஷமும் அவன் நினைவு எனக்குள் ஓடிட்டிருக்கு என்று கூறியுள்ளார்.

மேலும் உறவுமுறை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments