முத்தம் பற்றிய உண்மை: இந்த ரகசியம் உங்களுக்கு தெரியுமா?

Report Print Printha in உறவுமுறை
0Shares
0Shares
lankasri.com

முத்தம் என்பது அன்பை வெளிப்படுத்தும் ஒரு செயல்பாடு. ஆனால் அதையும் தாண்டி சில புனிதமான விடயங்கள் முத்தத்தில் மறைந்துள்ளது.

அதிலும் முத்தமானது மருத்துவ ரீதியாக பல ரசாயன மாற்றங்களை நம் உடலினுள் நிகழ்த்துகிறது என்று ஆய்வுகள் கூறுகிறது.

19-ம் நூற்றாண்டில் முத்தம் பற்றிய பிலிமெட்டாலஜி (Philematology) எனும் படிப்பு அறிமுகமானது.

இது குறித்த ஆராய்ச்சியில், சராசரியாக ஒரு மனிதன் தன் வாழ்நாளில் 20,160 நிமிடங்கள், அதாவது 2 வாரங்கள் முத்தமிடுவதற்கு செலவிடுகிறார்கள் என்பது தெரியவந்தது.

முத்தமிடுவதால் உடலில் ஏற்படும் மாற்றங்கள் என்ன?
  • அன்பை வெளிப்படுத்தும் முத்தம், நம் உடலின் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, வலி நிவாரணியாக பயன்படுகிறது.
  • முத்தமிடும் போது, ஒரு நொடிக்கு நான்கு கலோரிகள் வரை உடலில் எரிக்கப்படுகிறது. மேலும், இதனால் உடல் மற்றும் மனம் சார்ந்த நலன்கள் முத்தமிடுவதால் கிடைக்கிறது என்று ஆய்வு கூறுகிறது.
  • முத்தம் என்பது உதடு சார்ந்த செயல். ஆனால் முத்தமிடும் போது, உங்கள் உடலின் 146 தசைகளும் ஒருங்கிணைக்கப்படுகிறது. முகத்தில் உள்ள 34 தசைகள் மற்றும் 112 புற தசைகள் செயல்படுகிறது.
  • முத்தமிடும் போது உடலில் இருந்து அட்ரீனலின் மற்றும் நோரடனினலின் ஆகிய ஹார்மோன்கள் சுரக்கிறது. இதனால் இதயத்துடிப்பு அதிகரித்து, நம் உடலுக்கு புத்துணர்ச்சி மற்றும் ஆற்றல் கிடைக்கிறது.

முதல் முத்தத்தில் உள்ள ரகசியம் என்ன?

முதல் முத்தத்தின் போது பெரோமோன்ஸ், டொபமைன், நோர்ப்பின்ப்ரின், மற்றும் சிரோட்டினின் ஆகிய மூளையின் மகிழ்வு பகுதியை தூண்டும் ஹார்மோன்கள் தாறுமாறாக சுரக்கும்.

இதனால் இதயம் வேகமாக துடிக்கும், இந்நிலையில் உடல் மற்றும் மனதில் மகிழ்ச்சி அலைகள் உருவாகி, மீண்டும் மீண்டும் முத்தமிடும் ஆர்வம் ஏற்படும் இதுவே முத்தமிடுவதில் உள்ள ரகசியமாகும்.

மேலும் உறவுமுறை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்