சோஸ் பிரியரா நீங்கள்? விளைவுகளை தெரிந்து கொள்ளுங்கள்

Report Print Deepthi Deepthi in உறவுமுறை
0Shares
0Shares
lankasri.com

சோஸ் என்றாலே சாப்பாட்டு பிரியர்கள் அதற்கேற்ற உணவுகளை தயார் செய்து வைத்து விட்டு சாப்பிடுவதற்கு தயாராகி விடுவார்கள்.

தக்காளி சோஸ், ரெட் சில்லி அல்லது கிரீன் சில்லி சோஸ் . என கலர் கலரான சோஸ்களும், விதவிதமான உணவுகளையும் பார்க்கும்போது, சாப்பிடத்தான் தோன்றும்.

ஆனால், அதனை அளவோடு சாப்பிட்டால் பரவாயில்லை, தினந்தோறும் எடுத்துக்கொண்டால் தான் அதிகமான பக்கவிளைவுகள் உடலில் ஏற்படும்.

எல்லா சோஸ்களிலும் எண்ணெய், சர்க்கரை, புளிப்பு சுவைக்காக வினிகர் சேர்க்கிறார்கள்.

மேயனைஸ் சோஸில் முட்டையின் மஞ்சள்கரு, வினிகர், சர்க்கரை, உப்பு, கொஞ்சம் மைதா சேர்த்து தயாரிக்கிறார்கள்.

நீண்ட நாட்கள் கெடாமல் இருப்பதற்காக பதப்படுத்தும் பொருட்களை சேர்க்கிறார்கள். இவை அதிக கலோரி கொண்டவை. இதனால் கரையாத கெட்ட கொழுப்புகள் உடலில் சேர்ந்து பருமன் பிரச்சனையை ஏற்படுத்தும்.

ரெட் சில்லி சோஸ், கிரீன் சில்லி சோஸ் போன்றவற்றையும் அதிகம் சேர்த்துக் கொள்ளக் கூடாது, சிவப்பு மிளகாய் புற்றுநோயை ஏற்படுத்தக் கூடியது.

பர்கர் தயாரிக்கும் போதே அதிக அளவு சோஸ் சேர்த்துதான் செய்கிறார்கள். சுவைக்கு அடிமையானவர்கள் மேலும் அதிக சோஸை ஊற்றி அதில் பர்கரைத் தொட்டு சாப்பிடுகிறார்கள்.

மேலும் சூடான சோஸ்ஸினை சாப்பிடும்போது, நாக்கு மற்றும் உணவுக்குழாயில் எரிச்சல் ஏற்படும்.

அதுமட்டுமின்றி அல்சர் பிரச்சனைகள், மேலும் உங்கள் உடல் வெப்பநிலையில் மாற்றம் ஏற்பட்டு தூங்குவதற்கு சிரமம் ஏற்படும்.

இது உடல்நலத்தை எளிதில் கெடுத்துவிடும். சோஸ் உணவுக்கு தேவையில்லாத ஒன்று. சுவையைத் தவிர அதில் எந்த சத்துகளும் இல்லை, அதனால் இதனை தவிர்ப்பதே நல்லது.

மேலும் உறவுமுறை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்