18 வருட உறவின் ரகசியங்கள் இதுதான்: மனம் திறந்த நடிகை

Report Print Printha in உறவுமுறை
0Shares
0Shares
Cineulagam.com
advertisement

சினிமா துறையில் முதன்மை நாயகியாக வலம்வரும் நடிகை கஜோல் தனது 25 வயதில் அஜய் தேவ்கானை திருமணம் செய்து கொண்டார்.

தற்போது இருவருக்கும் திருமணமாகி 18 ஆண்டுகள் நிறைவுற்றது, எங்கள் திருமணத்தின் போது இவர்களின் திருமணம் விவகாரத்தில் தான் முடியும் என்று பலரும் பேசினார்கள்.

advertisement

ஆனால் அவர்களின் முகத்தில் கரியை பூசியது போல நாங்கள் எங்கள் வாழ்க்கையை 18 ஆண்டுகள் வெற்றிகரமாக முடிந்தும் சந்தோஷமாக வாழ்ந்து வருகின்றோம் என்று கஜோல் கூறியுள்ளார்.

எனினும் எங்களின் வாழ்வில் வேலை எவ்வளவு முக்கியமோ, அதே அளவிற்கு குடும்பமும் முக்கியம். திருமணத்திற்கு முன் வருடத்திற்கு நான்கு, ஐந்து படங்கள் நடித்து வந்தேன்.

ஆனால், திருமணத்திற்கு பின் வருடத்திற்கு ஒரு படம் மட்டுமே நடிப்பேன் என்று அஜய் தேவ்கனுக்கு வாக்களித்தேன். ஏனெனில் அதனால் எனது இல்லறத்திலும் போதுமான அளவு நேரம் செலவழிக்க முடியும் என கருதினேன்.

இதுவே எங்கள் இருவரின் இல்லறம் 18 வருடங்கள் ஆரோக்கியமாக இருப்பதற்கு முக்கிய காரணமாக இருந்தது.

என்னுடைய இந்த முடிவினால் குடும்பத்தில் எனது பங்கை உணர்ந்து நல்ல மனைவியாகவும் இருக்க முடிந்தது, ஒரு சிறந்த துணையாக எனது கடமையை நான் கடைப்பிடித்து வந்தேன்.

எங்களின் பிள்ளைகள் ஒரு வயதை எட்டிய பின் மீண்டும் நான் சரியான நேரம் ஒதுக்கி நடிப்பிலும், வேலையிலும் தனி கவனம் செலுத்தி வந்தேன்.

மிக குறிப்பாக எங்கள் உறவு ஆரோக்கியமாக இருப்பதற்கு நான் அதிகம் பேசுவேன், அஜய் அமைதியாக பொறுமையுடன் கேட்பார் என கூறியுள்ளார்.

ஒரு பிரபலமாக இருந்துக் கொண்டு, வீடு, நடிப்பு என இரண்டையும் சமாளிப்பது மிகவும் கடினம். இந்த தருணத்தில் நான் கஜோலை சரியாக புரிந்துக் கொண்டேன் என்று கஜோலின் கணவர் அஜய் தேவ்கான் கூறியுள்ளார்.

மேலும் உறவுமுறை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்