தனது காதல் கணவர் பற்றி நெகிழும் நமீதா

Report Print Kabilan in உறவுமுறை
0Shares
0Shares
lankasri.com

நடிகை நமீதா, தயாரிப்பாளர் வீராவை காதல் திருமணம் செய்யப் போவதாக அறிவித்துள்ளார்.

’எங்கள் அண்ணா’ படத்தின் மூலமாக தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் நமீதா. இவர் ஏய், இங்கிலீஷ்காரன், சாணக்யா உள்ளிட்ட பல தமிழ் படங்களிலும் நடித்துள்ளார்.

இவர் தற்போது, தயாரிப்பாளர் மற்றும் நடிகர் வீராவை வரும் 24ஆம் திகதி திருமணம் செய்யப்போவதாக அறிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், வீரா என்னுடைய சிறந்த நண்பர், கடந்த ஆண்டு எனது நண்பர் சஷிதர் பாபு என்பவர் மூலமாக வீரா எனக்கு அறிமுகமானார், நாங்கள் நல்ல நண்பர்களாக பழகினோம்.

கடந்த செப்டம்பர் மாதம் கடற்கரையில் நடந்த இரவு விருந்து ஒன்றில் வீரா என்னிடம் தனது காதலை வெளிப்படுத்தினார்.

நாங்கள் இருவரும் பல விடயங்களில் ஒத்துப் போவதால், அவரது காதலை நான் ஏற்றுக் கொண்டேன்.

கடந்த மூன்று மாதங்களாக அவருடன் பழகியதில், வீராவை முழுமையாக புரிந்து கொண்டேன்.

அவரது மென்மையான அக்கறை மற்றும் ஆதரவினால், ஆண்கள் மீதான எனது நம்பிக்கை மீட்டெடுக்கப்பட்டது.

எனக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றிகள், உங்கள் ஆசிர்வாதத்தை நாங்கள் இருவருமே எதிர்பார்க்கிறோம் என தெரிவித்துள்ளார்.

மேலும் உறவுமுறை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்