அப்பா சொன்ன அந்த வார்த்தைகள்: காதல் மனைவி பற்றி பிரசன்னா உருக்கம்

Report Print Fathima Fathima in உறவுமுறை
989Shares
989Shares
lankasrimarket.com

சினிமா துறையில் காதலித்து மணந்தவர்கள் ஏராளமாக இருப்பினும் ஒரு சில தம்பதிகளே எடுத்துக்காட்டாய் வாழ்கின்றனர்.

அப்படி காதல் மணக்க வாழ்பவர்களில் ஒரு தம்பதி தான் சினேகா- பிரச்சனா.

சினேகா குறித்து பிரசன்னா கூறுகையில், திருமணத்துக்கு முன்னே இரு குடும்ப பிரச்சனைகளை பற்றி பேசித் தீர்த்துக் கொண்டோம்.

இருந்தாலும் திருமணத்திற்கு பின்னரும் சின்ன சின்ன நெருடல்கள் இருக்கத்தான் செய்தன.

அதையெல்லாம் திறம்பட சமாளித்து வாழ்ந்து கொண்டிருக்கிறோம், விஹான் பிறந்த பின்னர் சினேகாவுக்கு மகன் தான் எல்லாமே.

அவனை தனியாகவிட்டு விட்டு இருக்கமாட்டார், படப்பிடிப்புக்காக வெளியூர் சென்றால் கூட அரைமணிநேரத்துக்கு ஒருமுறை போன் செய்திடுவார்.

பத்து நிமிடத்துக்கு ஒருமுறை சிசிடிவி கமெரா வழியாக பார்த்துக் கொண்டே இருப்பார்.

என்னை எந்த இடத்திலும் விட்டுக் கொடுக்காத சினேகாவின் குணம் எனக்கு பிடிக்கும், தோல்விகளின் போது என்னை உடனிருந்து தேற்றியவர்.

வீட்டை சுத்தமாக வைத்துக் கொள்வது, யார் மனதும் புண்படாமல் பேசுவது இந்த இரண்டு குணங்களுமே சினேகாவின் பிளஸ்.

நாங்களே ஒரு பெண்ணை பார்த்து திருமணம் செய்து வைத்தால் கூட இப்படி உறுதுணையாக இருந்திருப்பாரோ தெரியாது, சந்தோஷமாக இருக்கிறது என்றாராம் பிரசன்னாவின் அப்பா.

கிறிஸ்தவ முறைப்படி திருமணம் என்றால் சினேகாவுக்கு பிடிக்கும் என்பதால் அமெரிக்காவில் கிறிஸ்தவ முறைப்படி திருமணம் நடத்தினார்களாம்! அவரது அக்காவுக்கு பங்கேற்க சினோவின் கண்களில் ஆனந்தத்தை பார்த்ததாக மனமகிழ விவரிக்கிறார் பிரசன்னா.

மேலும் உறவுமுறை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்