சினிமா காதல் வாழ்க்கையில் நிஜமானது: பிரபல பாடகியின் அழகான கதை

Report Print Raju Raju in உறவுமுறை
813Shares
813Shares
lankasrimarket.com

தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் போன்ற பல மொழிகளில் பல நூறு பாடல்களை பாடியுள்ளவர் ஸ்ரேயா கோஷல்.

நான்கு முறை சிறந்த பாடகிக்கான தேசிய விருது வாங்கியுள்ள ஸ்ரேயா கோஷல் கடந்த 2015-ஆம் ஆண்டு ஷிலாதித்யா முகோபத்யயா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இரு தினங்களுக்கு முன்னர் முகோபத்யயா - ஸ்ரேயா தம்பதி தங்களது மூன்றாம் ஆண்டு திருமண நாளை கொண்டாடினார்கள்.

இதையடுத்து ஷிலாதித்யாவுடனான தனது காதல் கதையை உணர்ச்சிபூர்வமாக ஸ்ரேயா பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார்.

அதில், நீங்களும், நானும் ஒரு சாதாரண ஆணும் பெண்ணுமாகவும் அந்நியர்களாகவும் இருந்தோம்.

பள்ளிக்கூட மறுசந்திப்பின் அந்த நிமிடத்தில் தான் ஏதோ நடந்துவிட்டது. நமது இதயங்கள் உற்சாகத்தின் உச்சத்துக்கு சென்றன.

சினிமாவில் நான் பார்த்த காதலும், புத்தகத்தில் படித்த காதல் கதைகளும் நிஜத்தில் நடக்கும் என நினைக்கவில்லை, ஆனால் அது நடந்தது.

மூன்றாமாண்டு திருமண நாள் வாழ்த்துக்கள் என பதிவிட்டுள்ளார்.

மேலும் உறவுமுறை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்