காதல் மனைவி பற்றி நெகிழும் அட்லீ

Report Print Fathima Fathima in உறவுமுறை
592Shares
592Shares
lankasrimarket.com

என்னுடைய மனைவி என்பதை விட அவள் என்றுமே எனக்கு தோழி தான் என மகன் நெகிழ்கிறார் அட்லீ.

ராஜாராணி, தெறி, மெர்சல் என தொடர் ஹிட் படங்களை கொடுத்த அட்லீ வளர்ந்து வரும் இளம் இயக்குனர்களில் ஒருவர்.

இவரது மனைவி பிரியா, நிச்சயிக்கப்பட்ட காதல் திருமணம், தொழில், குடும்பம் என இரண்டையும் அழகாக கடந்து வரும் அட்லீ காதல் மனைவி பற்றி மனம் திறந்துள்ளார்.

அவர் கூறுகையில், நாங்கள் இருவரும் எட்டு வருடங்கள் நண்பர்களாக பழகினோம், ஒருநாள் அவளுக்கு மாப்பிள்ளை பார்ப்பதாக என் நண்பர்கள் கூறினர்.

என் ஜாதகத்தை தருகிறேன், வேண்டுமானால் பார்க்கச்சொல் என பிரியாவிடம் கூறினேன், அவள் அதிர்ச்சியடைந்தாள்.

விளையாட்டாக இல்லை, உண்மை தான் என்று கூறிய பிறகே ஒப்புக் கொண்டார், பின் இரு வீட்டாரின் சம்மதத்துடன் திருமணம் நடந்தது.

பரிசுப்பொருட்களை தாண்டி என் மனைவிக்கு மறக்கமுடியாத அழகான தருணங்களை உருவாக்குவதில் ஆர்வம் அதிகம்.

திருமணத்திற்கு பிறகு முதல் பிறந்தநாளை மாலைதீவில் கொண்டாடினோம், அவளுக்காக நான் இயக்கிய படத்தால் அளவுகடந்த சந்தோஷம் அடைந்தாள்.

அவளும் அப்படித்தான், என்னுடைய சிறுவயதில் நிறைவேறாத சந்தோஷங்களை என் பிறந்தநாளில் எனக்காக நிறைவேற்றுவாள்.

31ம் பிறந்தநாளன்று ஒவ்வொரு மணிநேரத்துக்கு ஒரு பரிசு கொடுத்து அசத்தினாள், குட்டி நாய், ரிமோட் கார் என பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது.

ஒரு குழந்தையை போல் அரவணைத்து அன்பில் நெகிழ வைப்பதாக தெரிவித்துள்ளார்.

மிக முக்கியமாக பட வேலைகளில் பிஸியாக இருக்கும் போது, குடும்பத்தை நிர்வகிப்பதே பிரியா தான், அவள் மட்டும் இல்லையென்றால் என்னால் சிறந்த படங்களை இயக்கியிருக்க முடியாது.

மேலும் உறவுமுறை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்