வாழ்வின் அந்த நொடிகள்: நடிகை சமந்தாவின் அழகான காதல் கதை

Report Print Raju Raju in உறவுமுறை
397Shares
397Shares
lankasrimarket.com

பிரபல திரைப்பட நடிகை சமந்தாவும், நடிகர் நாகசைத்தன்யாவும் கடந்தாண்டு அக்டோபர் மாதம் 6-ம் திகதி திருமணம் செய்து கொண்டார்கள்.

இவர்களது திருமணம் காதல் திருமணமாகும், இணைப்பிரியா நண்பர்களாக இருந்து பின்னர் உயிருக்கு உயிரான காதலர்களானது தான் இந்த தம்பதியின் சுவாரசியம் ஆகும்.

சமந்தாவும், நாக சைத்தன்யாவும் இணைந்து விண்ணை தாண்டி வருவாயா தமிழ்த் திரைப்படத்தின் தெலுங்கு பதிப்பான யே மாயா சிசவேவில் முதன் முதலில் ஜோடியாக நடித்தார்கள்.

திரையில் இவர்கள் செய்த காதல் ரசிகர்களால் கொண்டாடப்பட்டது, ஆனால் இருவருக்கும் அப்போது காதல் ஏற்படவில்லை, நெருங்கிய நண்பர்கள் ஆனார்கள்.

2011 - 2014 காலக்கட்டத்தில் நாகசைத்தன்யா பிரபல நடிகை சுருதிஹாசனுடன் டேட்டிங் சென்ற நிலையில், சமந்தா நடிகர் சித்தார்த்துடன் நெருங்கி பழகினார்.

ஆனால் சித்தார்த்தை காதலிப்பதாக சமந்தா ஒருபோதும் வெளியில் சொல்லவில்லை.

இந்நிலையில் தான் நாகசைத்தயா சுருதிஹாசனையும், சமந்தா சித்தார்த்தையும் பிரிந்தார்கள்.

அப்போது தான் 2015-ல் நாகசைதன்யா- சமந்தா இடையில் இருந்த நெருங்கிய நட்பு உயிர் காதலாக மாறியது. ஒருவர் இல்லாமல் இன்னொருவர் இல்லை என்ற அளவில் இருவரும் காதலில் மூழ்கினார்கள்.

இதையடுத்து மூன்று வருட காதல் கடந்தாண்டு அக்டோபர் 6-ஆம் திகதி திருமணத்தில் முடிந்தது.

இந்து முறைப்படி 6-ம் திகதியும், கிறிஸ்துவ முறைப்படி 7-ஆம் திகதி இருவருக்கும் திருமணம் நடந்தது.

திருமணம் ஆகி தம்பதிகள் ஆகிவிட்டாலும், என்றும் நாங்கள் காதலர்களே என சமந்தா சமீபத்தில் வெட்கத்துடன் கூறியது குறிப்பிடத்தக்கது.

மேலும் உறவுமுறை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்