பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தீயில் இறங்கிய பரவச காட்சி

Report Print Dias Dias in மதம்
264Shares
264Shares
lankasrimarket.com

கிழக்கு மாகாணத்தில் புகழ்பெற்ற மட்டக்களப்பு, புன்னைச்சோலை ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலய வருடாந்த உற்சவத்தின் இறுதிநாளான இன்று தீமிதிப்பு வைபவம் வெகு சிறப்பாக இடம்பெற்றுள்ளது.

இன்றைய தினம் மாலை 05.00 மணியளவில் கோலாகலமாக ஆரம்பமான தீமிதிப்பு வைபவத்தில் சுமார் 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு தீமிதித்து தமது நேற்றிக்கடன்களை நிறைவேற்றியுள்ளனர்.

இந்நிலையில், காலை தீக்குழிக்கு தீ ஏற்றும் வைபவம் உள்ளிட்ட கிரியைகள் நடைபெற்றதுடன் தொடர்ந்து மதியம் பக்தர்கள் மட்டக்களப்பு முகத்துவார வாவியில் மஞ்சள் குளித்தபின் தீ மிதிப்பு வைபவத்தில் கலந்து கொண்டனர்.

புன்னைச்சோலை ஸ்ரீ பத்திரகாளியம்மனின் இறுதிநாள் தீ மிதிப்பு உற்சவத்தின்போது வடக்கு, கிழக்கு மற்றும் இலங்கையின் பல பாகங்களிலும் இருந்தும் வருகைத்தந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்கின்றனர்.

இந்நிலையில், இன்றைய தீ மிதிப்பு வைபவத்தில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு பக்திப்பூர்வமாக தீ மிதிப்பில் கலந்து கொண்டிருந்தனர்.

மேலும் மதம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்