அம்பாறை வீரமுனை ஸ்ரீ சிந்தாயாத்திரைப் பிள்ளையார் ஆலய பாற்குடபவனி

Report Print Nesan Nesan in மதம்
80Shares
80Shares
lankasrimarket.com

கிழக்கிலங்கை அம்பாறை வீரமுனையில் எழுந்தருளியுள்ள அருள்மிகு ஸ்ரீ சிந்தா யாத்திரைப் பிள்ளையார் ஆலய உற்சவத்தின் ஒன்பதாவது நாள் தேர் திருவிழா இன்று இடம்பெற்றுள்ளது.

தேர் திருவிழாவை சிறப்பிக்கும் முகமாக இன்று மு.ப 9.30 மணியளவில் பாற்குட பவனி இடம்பெற்றது.

வீரமுனை ஆண்டியர் சந்தியில் அமைந்துள்ள முத்துலிங்க பிள்ளையார் ஆலயத்திலிருந்து பாற்குடம் எடுத்து வரப்பட்டு சீர்பாததேவி கண்டெடுத்த ஸ்ரீ சிந்தா யாத்திரை பிள்ளையாருக்கு பாலாபிஷேகம் இடம்பெற்றது.

முன்னே மேள தாளங்கள் முழங்க இரு யானையின் மீது பூசகர் பாற்குடம் எடுத்துவர அதன் பின்னே பல்வேறு கலை கலாசார நிகழ்வுகளுடன் பெண்கள் பாற்குடம் எடுத்து வந்து எம்பெருமானுக்கு பாலாபிஷேகம் இடம்பெற்றது.

மேலும் மதம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்