எலிகளுக்காகவே ஒரு அதிசய கோவில்

Report Print Kavitha in மதம்
0Shares
0Shares
lankasrimarket.com

ராஜஸ்தானின் பீகானேர் மாவட்டத்தில் உள்ள தேஷ்நோக் கிராமத்தில் அமைந்துள்ளது துர்க்கையின் அவதாரமான கர்ணி மாதாவின் திருக்கோயில், எலிகளுக்கான ஒரு ஆலயமாகவே கருதப்படுகின்றது.

அரண் போல் இருக்கும் மதில் சுவர்களால் சூழப்பட்டு இருக்கிறது கர்ணி மாதாவின் திருக்கோயில்.

இக்கோவிலின் முன்புற நுழைவு வாயிலில் அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய பளிங்குக் கற்கள் பதிக்கப்பட்டுள்ளது, இக்கோயிலின் வாயிற் கதவுகள் வெள்ளியால் ஆனவை.

அதில் கர்ணி மாதாவின் வாழ்கையில் நடந்த சம்பவங்கள்அனைத்தும் சித்தரிக்கப்பட்டுள்ளன.

அதில் ஒன்றில் தேவி கையில் சூழத்துடன் சுற்றி எலிகளுடன் காட்சி தருகின்றாள்.

இங்கு அதிகமாக கருப்பு எலிகள் மட்டுமே காணப்படுவதால், வெள்ளை எலிகள் தப்பித்தவறி கண்களில் பட்டு விட்டால் மிகவும் நல்லது என மக்கள் நம்புகிறார்கள்.

கர்ணி மாதாவின் கோவிலில் காணப்படும் எலிகளும் கர்ணிமாதாவின் சக குடிமக்களாகவே கருதப்படுகின்றன.

அதனால் தான் 20ஆயிரத்துக்கும் மேற்பட்ட எலிகளுக்கு இந்த ஆலயத்தில் ராஜமரியாதை அளிக்கப்படுகிறது.

இவ்வாலயத்தில் விக்ரகம் முழுவதும் குங்குமத்தால் மூடப்பட்டிருக்கிறது, பெரிய தட்டுக்களில் லட்டுகள், பால் பிரசாதங்கள் போன்ற தின்பண்டங்கள் எலிகளுக்கு வழங்கப்படுகின்றது.


மேலும் மதம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments