எறும்புகள் ஊறுவதற்காக வட புறம் சாய்ந்த சிவபெருமான்

Report Print Gokulan Gokulan in மதம்
0Shares
0Shares
Cineulagam.com
advertisement

திருவெறும்பூர் எறும்பீசுவரர் கோயில் திருச்சி மாவட்டத்தில்அமைந்துள்ளது சிவத்தலமாகும். எறும்புகளுக்கும் அருள் புரிந்த ஈஸ்வரன் எழுந்தருளிய இடமாதலால் இத்தலம் எறும்பியூர் என்றழைக்கப்பட்டது.

இத்தலத்தில் தன் மீது எறும்புகள் ஊற ஏதுவாக வட புறம் சாய்ந்த சிவபெருமான் மேற்ப்புரம் சொரசொரப்பாகவும் காணப்படுகின்றார்.

advertisement

சிவலிங்கத்தின் மீது எறும்புகள் ஊர்ந்த அடையாளங்களைக் காணலாம்.

தலச்சிறப்பு

இத்தலம் முற்றிலும் கற்களால் அமைக்கப்பட்ட கருவறை கொண்டது. இங்கு எழுந்தருளியிருக்கும் மூலவர் லிங்கம் மண்புற்று வடிவில் காட்சி தருகின்றார்.

எனவே நேரடியாக அபிசேகம் செய்யாமல், நீர்புகாதவாறு கவசம் பொருத்திய பின் அபிசேகம் செய்யப்படுகின்றது.

இத்தலம், மும்மூர்த்திகளில் சிவன் தவிர்த்த இருவரான திருமால் மற்றும் பிரம்மா வழிபட்ட சிறப்புடைய தலம்.

இந்திரன் முதலான தேவர்களும் அகத்தியர் நைமிச முனிவர் ஆகிய முனிவர்களும் இத்தலத்தின் சிறப்பறிந்து இங்கு வழிபட்டனர்

சோழ மன்னர்களில் பெரும் ஆதரவையும் இந்தக் கோயில் பெற்றுள்ளது.

இது ஒரு பாடல் பெற்ற தலம். சிறப்பு மிக்க சிவனடியாரான திருநாவுக்கரசர், இப்பெருமானின் சிறப்புக்களை ஐந்தாம் திருமுறையில் பாடியருளியுள்ளார்.

தல வரலாறு

தாரகாசுரன் என்னும் கொடிய அரக்கன் இழைத்த கொடுமைகளினால் தாங்கொணாத் துயருற்ற தேவர்களும் முனிவர்களும், நாரத முனிவரின் அறிவுரையின்படி திருச்சியை அடுத்துள்ள இம்மலையில் எழுந்தருளிய ஈசனைத் தொழச் செல்கையில், அவ்வரக்கன் அறியாத வண்ணம் எறும்பின் வடிவினை மேற்கொண்டு வழிபட்டனராம்.

மலை மீது அமைந்துள்ள இக்கோயிலை அடைந்து அதில் சிவ லிங்கத்தைத் தொழ எறும்புகள் மிகவும் சிரமப்பட்டதால், ஈசன் தனது உறைவிடத்தையே ஒரு எறும்புப் புற்றாக மாற்றிக் கொண்டார். இதன் காரணமாகவே எறும்பீஸ்வரர் என இத்தல நாதர் அழைக்கப்படலானார்.

இவ்வாலயம் போர் வீரர்களின் மிகப் பெரிய தலமாக பயன்பட்ட இந்தக் கோயில் தற்போது தொல்லியல் துறையின் பராமரிப்பில் உள்ளது.

மதிலில் நந்திகளும் முழுவதும் கருங்கற்களினால் ஆன வேலைப்பாடுகளும் கொண்ட இந்த கோயிலின் சில இடங்களில் சுரங்கப் பாதைகளும் காணப்படுகின்றன.

இக்கோயிலில் சூரியானரின் திருவுரு நவக்கிரக சந்நிதியில் தமது இரு மனைவியரோடும் காட்சியளிக்கின்றார்.

திருச்சி மலைக் கோட்டையில் திரிசிரன் வழிபட்டதைப் போன்று, அவனது சகோதரனான கரன் இங்கு எறும்பு உருக்கொண்டு வழிபட்டதாகக் கூறுவதுமுண்டு.

advertisement

இந்திரன் முதலான தேவர்களும், அகத்தியர் நைமிச முனிவர் ஆகிய முனிவர்களும் இத்தலத்தின் சிறப்பறிந்து இங்கு வழிபட்டனர்.

மேலும் மதம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்