பாறைகளை குடைந்து கட்டப்பட்ட ஓர் பிரமாண்ட அதிசய ஆலயம்

Report Print Gokulan Gokulan in மதம்
0Shares
0Shares
Cineulagam.com
advertisement

சுமார் 1,200 ஆண்டுகளுக்கு முன்னர் குகைகளை குடைந்து கட்டப்பட்டது தான் கைலாசர் கோயில். இது அவுரங்காபாத், மகாராட்டிரம் நகரிலிருந்து 30 கிமீ தொலைவில் உள்ளது.

மராஷ்டிரகூட மரபினரின் ஆட்சிக் காலம் புகழ் பெற்ற குடைவரைகளைக் கொண்டு விளங்குகிறது. இக்கோயில் மலைத்தளி வகையைச் சார்ந்தது. இவை கி.பி. 5 ஆம் நூற்றாண்டுக்கும் 10 ஆம் நூற்றாண்டுக்கும் இடையில் அமைக்கப்பட்டவை.

advertisement

இராஷ்டிரகூட அரசன் முதலாம் கிருஷ்ணன் ஆட்சிக் காலத்தில் கட்டமைக்கப்பட்டுள்ளதாக சான்றுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இக்கோயில் திராவிட கலைப்பாணிக்குரிய பண்புகளையும், இராஷ்டிரகூட கலைப்பாணியின் அம்சங்களையும், பல்லவ கலை பண்புகளையும் ஒருங்கே கொண்டுள்ள வித்தியாசமான கோவில் கட்டமைப்பாகும்.

எல்லோரா குகையில் மொத்தம் 34 குகைகள் உள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது. இதில் பிரசித்தி பெற்றது ஒரே கல்லில் செங்குத்தாக கட்டப்பட்ட கைலாச நாதர் கோவில் என்பதும் குறிப்பிடத்தக்கது. இது எல்லோரா குகைப்பாறையில் 16-வது கோவில் விளங்குகின்றது.

இக்கோயில் பல ஆராய்ச்சியாளர்கள் கைலாச கோவிலானது செங்குத்து குழி முறையை பயன்படுத்தி கட்டமைக்கப் பட்டுள்ளதாக நம்புகின்றனர். அதாவது அசல் கற்பாறைகள் மேலிருந்து தொடங்கி கீழ்நோக்கி செதுக்கப்பட்டதாக அறிய முடிகின்றது.

இக்கோயில் ஒற்றைக்கல் கோயில் வகையைச் சேர்ந்தது. சிவனின் இருப்பிடமான கைலாசத்தைப் போன்று வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த ஒற்றைகல் கோயிலை உருவாக்க பலநூறு ஆண்டுகளாக, கிட்டத்தட்ட 400,000 டன் எடையுள்ள பாறைகள் குடைந்தெடுக்கப்பட்டிருக்க வேண்டுமென நம்பப்படுகின்றது.

கோவில் சுவற்றில் காணப்படும் உளிகளின் தடங்களைக் கொண்டு மூன்று விதமான உளிகள் பயன்படுத்தப்பட்டுள்ளதாகக் தொல்லியல் ஆய்வாவாளர்கள், கருதுகின்றனர்.

250அடி நீளமும் 150அடி அகலமும் கொண்ட நிலப்பரப்பில் ஆலயம் அமைந்துள்ளது. ஆலயம் 148அடி நீளமும் 62அடி அகலமும் 100அடி உயரமும் உடையது.

இந்தக் கோயிலைக்கட்டி முடிக்க 150 ஆண்டுகள் ஆகியிருக் கின்றன. மூன்றுக்கும் மேற்பட்ட தலைமுறையைச் சேர்ந்த கட்டிடக்கலை நிபுணர்கள் இதில் பங்கேற்றுள்ளனர்.

advertisement

முதலாவது கிருஷ்ணர் காலத்தில் தொடங்கிய கோயில் கட்டுமானம் யாருடைய காலத்தில் முடிந்தது என்று தெரியவில்லை. அதே வேளையில், கோயில் கட்டுமானம் இன்னமும் பூர்த்தியடையவில்லை என்பதற்கு அடையாளமாக ஆங்காங்கே சில வேலைகள் முடிக்கப் பெறாமல் இருக்கின்றன.

கோபுரம் இரட்டை அடுக்கிலானது நந்தி மண்டபமும் கோபுரமும் 2 அழகிய கல்துண்டுகளால் இணைக்கப்பட்டுள்ளன. விமானத்தின் சிகரம் 3 அடுக்குகளைக் கொண்டது.

கோயிலின் வடக்குப் புறத்தில் உள்ள சிற்பங்களில் ராவணன் தன்னுடைய 10 தலைகளில் 9 தலைகளை சிவனுக்கு காணிக்கை தருவது வடிக்கப்பட்டிருக்கிறது. இந்த 9 தலைகளையும் சிவன் மாலையாகக் கோர்த்து அணிந்திருப்பதைப்போல சிற்பம் காட்சி தருகிறது. இன்னொருபுறத்தில் பக்த மார்க்கண்டேயரைப் பற்றிய காட்சிகள் வடிக்கப்பட்டுள்ளன.

சிவனுக்கும் பார்வதிக்கும் திருமணம் நடந்ததைக் காட்டும் கல்யாணசுந்தரர் சிற்பமும் அருகிலேயே முப்புரங்களையும் எரித்த திரிபுராந்தகர் சிற்பமும் அழகுற வடிக்கப்பட்டுள்ளன.

ஒரு தேரில் சிவன் தன்னுடைய கால்களை அகலவிரித்து நின்று கொண்டு வில்லில் அம்பைப் பூட்டி 3 அசுரர்களின் தலைகளுக்கும் குறிவைப்பதுபோல் திரிபுராந்தகர் சிலை இருக்கிறது.

அந்தத் தேருக்கு பிரம்மாதான் சாரதி 4 வேதங்கள் தேரின் சக்கரங்களாகத் திகழ்கின்றன. இதையே அடிப்படையாகக் கொண்டு தஞ்சாவூர்க் கோயிலொன்றில் திரிபுராந்தகர் அழகிய ஓவியமாகத் தீட்டப்பட்டிருக்கிறார்.

ஒரு சிற்பம் சிவனின் நாதாந்த தாண்டவத்தைச் சித்தரிக்கிறது 108 தாண்டவங்களில் இதுதான் சிறப்பு வாய்ந்தது. ஏனென்றால் இதில்தான் சிவன் ஆக்கல், காத்தல், அழித்தல் ஆகிய முத்தொழிலையும் செய்கிறார்.

உலகின் அதிசயங்களில் ஒன்றாகக் கருதத்தக்கவகையில் அற்புதமான பக்தியோடு, கலை இரசனையோடு, ஈடுபாட்டோடு இந்தச் சிற்பங்களை வடித்துள்ளனர், ஓவியங்களைத் தீட்டியுள்ளனர். அதிலும் 3 வெவ்வேறு தலைமுறையைச் சேர்ந்தவர்கள் இணைந்து ஒரே கோயிலுக்காக உழைத்துள்ளனர்.

இதில் பக்தி மட்டும் இல்லை, மிகச் சிறந்த கலைப்படைப்பை உருவாக்கவேண்டும் என்ற தாகமும் சேர்ந்து பரிணமித்துள்ளது. இது கட்டக்கலைக்கும் பெருமையைத் தரும் வகையில் கைலாச நாதர் கேயில் அமையப்பட்டுள்ளது.

மேலும் மதம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்