சூரியனின் மேற்பரப்பில் பாரிய மாற்றம்! பூமிக்கு ஆபத்து

Report Print Steephen Steephen in விஞ்ஞானம்
0Shares
0Shares
lankasrimarket.com

சூரியனின் மேற்பரப்பில் பெரிய நீண்ட கறுப்பு பள்ளம் ஏற்பட்டுள்ளது அவதானிக்கப்பட்டுள்ளதாக நாசா நிறுவனம் அறிவித்துள்ளது.

சூரியனின் மேற்பரப்பில் கீழ் இருந்து மேல் நோக்கி கறுப்பு நிறத்திலான இந்த பள்ளம் காணப்படுவதாக கண்காணிப்பை மேற்கொண்டு வரும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த வாரம் சூரியனில் இருந்து பூமியை பக்கத்தை நோக்கி தீச் சுடர் வெளிப்பட்டது. இது தொடர்பாக நடத்திய ஆய்வில் இந்த கறுப்பு புள்ளி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஜனவரி 2 ஆம் மற்றும் 5 ஆம் திகதிகளுக்கு இடைப்பட்ட காலத்தில் இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளது.சூரியனில் ஏற்பட்ட இந்த மாற்றம் நீடித்தால், பூமிக்கு மாத்திரமல்ல முழு கோள் மண்டலத்திற்கும் ஆபத்து ஏற்படலாம் என நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

முதல் ஆபத்து பூமிக்கு மேல் இருக்கும் செயற்கை கோள்களுக்கு ஏற்படும் என்பதுடன் அவை அழிந்து போகக்கூடும்.

உலக முழுவதில் உள்ள மின்மாற்றிகள், பாரிய தண்ணீர் குழாய்கள் வெடிக்கலாம் எனவும் ரேடார் கருவிகள் செயலிழக்கலாம் எனவும் தொலைத் தொடர்பு கோபுரங்கள் செயலிழக்கலாம் எனவும் இணையத்தளம் செயலிழக்கலாம் எனவும் வான் பரப்பில் கதிர் வீச்சு ஏற்படலாம் எனவும் விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்

மேலும் விஞ்ஞானம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments