சூரியனை விட வெப்பான கிரகம் கண்டுபிடிப்பு: ஆச்சரிய வீடியோ

Report Print Raju Raju in விஞ்ஞானம்
0Shares
0Shares
Cineulagam.com
advertisement

சூரியனை விட இரு மடங்கு பெரிதாகவும், வெப்பமாகவும் உள்ள கெல்ட் 9 பி என்ற கிரகத்தை வானியல் நிபுணர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

அமெரிக்காவின் கொலம்பசில் உள்ள ஓகியோ பல்கலைக்கழக பேராசிரியர் தலைமையிலான குழு, கிரகங்கள் குறித்த ஆய்வை கடந்த 2016ம் ஆண்டு மே மாதம் முதல் மேற்கொண்டு வருகிறது.

advertisement

அவர்கள் கண்டறிந்த ஆய்வின் முடிவுகள் நேச்சர் என்ற அறிவியல் பத்திரிகையில் தற்போது வெளியாகியுள்ளது.

அதில் இதுவரையில்லாத அளவு மிக சூடான பெரிய வாயுக்கிரகம் கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கெல்ட் 9 பி எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த கிரகம், வியாழன் கிரகத்தை விட 2.8 மடங்கு பெரியதாகும்.

மேலும், கெல்ட் 9 பி கிரகம் சூரியனை விட இரு மடங்கு பெரியது மற்றும் சூடானதாகும்.

கெல்ட் 9 பி கிரகத்தின் பகல்நேர வெப்பநிலை 4,300 டிகிரி செல்சியஸ் ஆகும். இதை கெல்ட் வகை டெலஸ்கோப் மூலமே காணமுடியும்.

மற்ற நட்சத்திரங்களால் சூழப்பட்டுள்ள கெல்ட் கிரகத்தின் ஒரு பகுதியில் நீர், கார்பன்டை ஆக்சைடு, மீத்தேன் உள்ளிட்ட மூலக்கூறுகள் உள்ளது.

ஆனால் இந்த மூலக்கூறுகள் கிரகத்தின் மற்றொரு பகுதியில் உள்ள ஊதாக்கதிர்கள் காரணமாக நிலையாக அங்கு இல்லை என கூறப்பட்டுள்ளது.

மேலும் விஞ்ஞானம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments