மலையின் உச்சி குளிர்ச்சியாக இருப்பது ஏன் தெரியுமா?

Report Print Printha in விஞ்ஞானம்
0Shares
0Shares
lankasrimarket.com

சூரியனுக்கு மிக நெருக்கமாக இருப்பதை போல் தெரியும் மலையின் உச்சிப் பகுதிகள் குளிர்ச்சியாகவே இருக்கும். அதற்கான காரணத்தை நீங்கள் யோசித்தது உண்டா?

மலையின் உச்சி குளிர்ச்சியாக இருப்பது ஏன்?

மலையின் உச்சியில் தட்பவெப்பநிலை மாறுவதற்கு முதன்மைக் காரணம் வளிமண்டல அழுத்தம் குறைந்து கொண்டே இருப்பது தான்.

வளிமண்டல அழுத்தம் குறையக் குறைய மலை உச்சியின் வெப்பநிலையும் குறைந்து, குளிர்ச்சி அதிகமாகின்றது.

உதாரணமாக, ஒவ்வொரு 100 மீட்டர் மேலே ஏறினால், 1 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை குறையும்.

வளிமண்டல அழுத்தம் குறைவு என்பது காற்று மூலக்கூறுகளின் அளவு குறைவது. இதனால் தான் மலை உச்சிகளில் செல்லும் போது சுவாசிப்பதில் கஷ்டம் ஏற்படுகிறது.

விமானப் பயணம் செல்பவர்களுக்கும் இந்த பிரச்சனை ஏற்படுமா?

விமானத்தின் இன்ஜின்களில் காற்றழுத்தத்தை உருவாக்கும் இயந்திரம் உள்ளது, இது வெளியிடும் காற்று, எரிபொருளுடன் கலப்பதற்கு முன் விமானத்தில் பயணம் செல்பவர்களை சுற்றி உள்ள காற்றை வெப்பப்படுத்த பயன்படுத்தப்படுகிறது.

இந்த வெப்பக் காற்று, விமானச் சுவர்களிடையே வெப்பம் கடத்தும் திறனை தடுத்து, மனித உடல் வெளிவிடும் வெப்பம் மூலம் விமானத்திற்குள் மனிதர்களுக்கு உகந்த வெப்பநிலை பராமரிக்கப்படுகிறது.

எனவே இந்த நவீனத் தொழில்நுட்ப உதவி காரணமாக, விமானத்தில் பயணிப்பவர்கள் பாதுகாப்பாக பயணிப்பார்கள்.

மேலும் விஞ்ஞானம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments