விண்வெளியில் உருவாகும் புதிய நாடு: வியக்க வைக்கும் விஞ்ஞானம்

Report Print Peterson Peterson in விஞ்ஞானம்
0Shares
0Shares
lankasrimarket.com

சர்வதேச நாடுகள் பிரமிக்கும் வகையில் விண்வெளியில் ஒரு புதிய நாடு உருவாக்கி அதில் லட்சகணக்கானவர்களை குடியேற உள்ளதாக சர்வதேச விஞ்ஞானிகள் குழு அதிரடியாக அறிவித்துள்ளது.

நாம் வசிக்கும் இந்த பூமியில் 196 நாடுகள் உள்ளன, தற்போது இன்னொரு நாடு உதயமாக உள்ளது.

ஆனால் பூமியில் இல்லை, பூமிக்கு வெளியே விண்வெளியில் இந்த புதிய நாடு உருவாக உள்ளது.

கடந்த 2016-ம் ஆண்டு விண்வெளியில் புதிதாக ஒரு நாடு உருவாக்கப்பட்டு அதில் மனிதர்களை குடியேற்றுவோம் என சர்வதேச விஞ்ஞானிகள் குழு அறிவித்து உலக நாடுகளை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது.

தற்போது இந்த புதிய நாடு உருவாக்கும் பணி இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளதாகவும், எதிர்வரும் செப்டம்பர் மாதம் இந்த புதிய நாடு விண்வெளியில் செலுத்தப்பட்டு பூமியின் சுற்றுவட்டப்பாதையில் நிலைநிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய நாட்டிற்கு அஸ்கார்டியா(Asgardia) எனப்பெயர் சூட்டப்பட்டுள்ளது. இதன் நிறுவனரான Igor Ashurbeyli என்பவர் தான் இந்த புதிய நாட்டிற்கு தலைவராகவும் ஆட்சியாளராகவும் இருப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது இந்த விண்வெளி நாட்டில் குடியேற 200 நாடுகளில் இருந்து 5 லட்சம் பேர் வரை விண்ணப்பம் செய்துள்ளனர். எனினும், இவர்களில் 2 லட்சம் பேர் வரை மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இந்த விண்வெளி நாட்டில் வசிப்பது மட்டுமில்லாமல், இங்கிருந்து பூமியை காக்கும் பணிகளையும் மேற்கொள்ள உள்ளதாக Igor Ashurbeyli தெரிவித்துள்ளார்.

உலக வரலாற்றில் முதன் முதலாக விண்வெளியில் உருவாக உள்ள இந்த புதிய நாட்டை ஐ.நா சபை உள்ளிட்ட பிற நாடுகளும் அங்கீகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் விஞ்ஞானம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments