பூமியே அழிந்தாலும் சூரியன் உள்ளவரை வாழும் உயிரினம்

Report Print Santhan in விஞ்ஞானம்
0Shares
0Shares
lankasri.com
advertisement

அனைத்து உயிரினங்கள் பூமியில் அழிந்தாலும், சூரிய குடும்பத்தில் உள்ள அனைத்து கேள்கள் அழிந்தாலும், சூரியன் அழியும் வரை உயிருடன் இருக்கும் ஒரே உயிரினம் எது என்று கேட்டால், அது நீர் கரடி தான்.

பொதுவாக இது கடலின் அடிப்பகுதியிலும், பனிப்பிரதேசங்களிலும் வாழ்கின்றன. இது பார்ப்பதற்கு கரடி போன்று இருப்பதால், நீர் கரடி என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.

advertisement

இதன் அறிவியல் பெயர் டார்டிகிரேட். இது அதிகபட்சமாக 0.5 மில்லி மீற்றர் அளவிற்கு வளரக்கூடிய நுண்ணுயிரி. அதுமட்டுமின்றி இந்த நீர் கரடியால் நீர் மற்றும் உணவு இல்லாமல் 30 வருடங்கள் வரை வாழ முடியும்.

150 டிகிரி வெப்ப நிலை செல்சியஸிலும், உறைய வைக்ககூடிய விண்வெளியிலும் உயிர்வாழுக்கூடியது. இதற்கு எட்டு கால்கள் உள்ளன.

மனிதர்களால் தாங்கக்கூடிய கதீர்வீச்சு அளவில், 1000 மடங்குக்கு அதிகமான கதிர்வீச்சை தாங்கிக் கொள்ளும் சக்தி பெற்றவை.

பூமி முழுவதும் அழிந்த பிறகும் வாழக்கூடிய உயிரினம் நீர் கரடி தான்.

மேலும் விஞ்ஞானம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments