செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள் குடியேற்றம்: நாசா முக்கிய விளக்கம்

Report Print Raju Raju in விஞ்ஞானம்
0Shares
0Shares
lankasrimarket.com

செவ்வாய் கிரகத்தில் மனிதர்களை குடியேற்றம் செய்யும் திட்டம் 2030-க்குள் நடக்க சாத்தியமில்லை என நாசாவின் மூத்த அதிகாரி கூறியுள்ளார்.

செவ்வாய் கிரகத்தில் உள்ள தட்ப வெப்ப நிலை, காலநிலை மாற்றம் போன்ற பல்வேறு விடயங்கள் குறித்து நாசா நிறுவனம் தொடர்ந்து ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது.

செவ்வாயில் மனிதர்கள் வாழ்வதற்கான சூழ்நிலைகள் சாத்தியமாகும் பட்சத்தில் அங்கு மனிதர்களை அனுப்பி பரிசோதனை செய்வது குறித்த திட்டமும் நாசாவின் பரிசீலனையில் உள்ளது.

இது குறித்து நாசாவின் விண்வெளி ஆய்வு பிரிவின் தலைவர் வில்லியம் ஜெர்ஸ்டன்மையர் கூறுகையில், 2030-க்குள் மனிதர்களை செவ்வாயில் குடியேற்றம் செய்வதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை என கூறியுள்ளார்.

மேலும், செவ்வாயில் மனிதர்களை குடியேறச் செய்யும் திட்டத்துக்கு அதிக பணம் செலவாகும் என கூறிய வில்லியம், தற்போதைய பட்ஜெட்டை கொண்டு இத்திட்டத்தை வெற்றிகரமாக நிறைவேற்ற முடியாது என தெரிவித்துள்ளார்.

நாசா மட்டுமில்லாமல் பல்வேறு தனியார் நிறுவனங்களும் விண்வெளியில் மனிதர்களை குடியேற்றம் செய்யும் திட்டத்துக்காக கடுமையாக உழைத்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் விஞ்ஞானம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments