போலி வைரஸ்களை உருவாக்க உந்துதல் கொடுக்கும் புற்றுநோய் கலங்கள்!

Report Print Givitharan Givitharan in விஞ்ஞானம்
0Shares
0Shares
lankasrimarket.com

புற்றுநோய் தாக்கத்தின்போது அனேகமான கலங்களில் வைரஸ் போன்ற அமைப்புக்கள் உருவாக ஆரம்பிக்கும்.

உண்மையில் இவை போலியான வைரஸ்கள் ஆகும்.

புற்றுநோய் தாக்கத்திற்கு உள்ளான கலங்களே ஏனைய கலங்களில் இவ்வாறான ஒரு மாயையை ஏற்படுத்த தூண்டுகின்றன.

இதனை பென்ஸில்வேனியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் குழு ஒன்று கண்டுபிடித்துள்ளது.

மேலும் இவ்வாறான கலங்களே புற்றுநோய்க்கு சிகிச்சை அளிப்பதற்கு தடையாக அமைகின்றன எனவும் கண்டுபிடித்துள்ளனர்.

வைரஸ் போன்ற நோய்க்கிருமிகளின் தாக்கத்தை கட்டுப்படுத்த இன்டபெரோன் எனும் புரதம் கலங்களில் சுரக்கும்.

இது நோயெதிப்பு சக்தியினை செயற்பாட்டு நிலையில் வைத்திருக்கும்.

குறித்த இன்டெபெரோன் உற்பத்தியினை RN7SL1 எனும் RNA மூலக்கூறு மந்த நிலைக்கு இட்டுச் செல்கின்றது.

இதன் காரணமாகவே புற்றுநோய் தாக்கம் தவிர்ந்த ஏனைய கலங்களில் போலியான வைரஸ் போன்ற அமைப்பு தோற்றுவிக்கப்படுவதாக அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.

மேலும் விஞ்ஞானம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments