விரைவில் சாத்தியமாகும் ஹைட்ரஜன் மாற்று எரிபொருள்!

Report Print Givitharan Givitharan in விஞ்ஞானம்
132Shares
132Shares
lankasrimarket.com

பெட்ரோலிய எரிபொருளுக்கு பதிலாக ஹைட்ரஜன் எரிபொருள் பயன்படுத்தும் சாத்தியம் விரைவில் உருவாகும் என தெரிகிறது.

அமெரிக்காவின் இராணுவ ஆய்வுகூடத்தில் (US Army Aberdeen Proving Ground Research Laboratory) மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்றின்போது இது தற்செயலாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அதாவது அதிக வலிமை உடைய அலுமினியம் கலவையினை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்த சமயம் அதன் மேல் நீரூற்றிய போது குமிழிகள் தோன்றியதுடன் ஹைட்ரஜன் வாயுவும் வெளியேறியுள்ளது.

இது ஒரு வழமைக்கு மாறான நிகழ்வு என ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

எவ்வாறெனினும் ஹைட்ரஜனை உற்பத்தி செய்வதற்கு மற்றுமொரு மாற்றுவழி கிடைத்துள்ளதாகவும், விரைவில் பெட்ரோலியம் எரிபொருளுக்கு பதிலாக இதனை பயன்படுத்த முடியும் எனவும் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை ஹைட்ரஜன் எரிபொருளானது 100 சதவீதம் சக்தியாக மாற்றப்படக்கூடியது என்பது விசேட அம்சமாகும்.

மேலும் விஞ்ஞானம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்