டைனோசர் காலத்து தாவரம் தற்போதும் உள்ளமை கண்டுபிடிப்பு!

Report Print Givitharan Givitharan in விஞ்ஞானம்
0Shares
0Shares
lankasrimarket.com

டைனோசர் எனும் விலங்கினமானது இப் பூமியில் சுமார் 66 மில்லியன் வருடங்களுக்கு முன்னர் வாழ்ந்ததாகக் குறிப்பிடப்படுகின்றது.

இக் காலகட்டத்தில் பூமியில் காணப்பட்ட தாவர இனம் ஒன்று தற்போதும் அமெரிக்காவில் இருக்கின்றமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

வட அமெரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள இந்த தாவரமானது Lychnothamnus barbatus என அழைக்கப்படுகின்றது.

இதற்கு முன்னர் 2012 மற்றும் 2016 ஆம் ஆண்டு காலப் பகுதியில் அமெரிக்காவின் Wisconsin மற்றும் Minnesota ஆகிய பிரதேசங்களுக்கு இடையில் உள்ள 16 நீரேரிகளில் பச்சை நிறமான பெரிய அல்காக்கள் கண்டுபிடிக்கப்பட்டிருந்தன.

இவற்றின் பரம்பரை அலகினை ஒத்ததாக Lychnothamnus barbatus தாவரத்தின் பரம்பரை அலகு காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் விஞ்ஞானம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்