நிறம் மாறும் கடல் பாம்புகள்: நீர் மாசடைதலின் விளைவு என விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Report Print Givitharan Givitharan in விஞ்ஞானம்
201Shares
201Shares
lankasrimarket.com

கழிவுப் பொருட்களை கடலில் சேர்ப்பதனால் கடல் நீர் மாசடைந்து வருகின்றமை அனைவரும் அறிந்ததே.

எனினும் கடல் நீர் மாசடையும் தன்மை வெகுவாக அதிகரித்து வருவதாக விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.

இதற்கு கடல் வாழ் பாம்புகளின் நிறம் மாறிவருவதை எடுத்துக்காட்டியுள்ளனர்.

Emydocephalus annulatus எனும் இனத்தைச் சேர்ந்த கறுப்பு நிற பாம்புகள் கடும் பழுப்பு நிறத்திற்கு மாறி வருகின்றன.

கழிவுகள் பாம்புகளின் இரத்தத்தில் உள்ள நாகம் மற்றும் ஈயத்தின் செறிவில் மாற்றத்தை ஏற்படுத்துகின்றது.

இதன் காரணமாக பாம்புகளின் தோலிலுள்ள மெலனின்களின் நிறமிகள் நிறமாற்றத்திற்கு உள்ளாகின்றது என அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.

மேலும் விஞ்ஞானம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்