பூமியில் முதல் விலங்குகள் தோன்றியது எப்படி? மர்மம் விலகியது

Report Print Arbin Arbin in விஞ்ஞானம்
0Shares
0Shares
Cineulagam.com
advertisement

பூமியில் தோன்றிய முதல் விலங்கு தோன்றியது எப்படி என்ற மர்மத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

அவுஸ்திரேலிய தேசிய பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் மத்திய அவுஸ்திரேலியாவில் உள்ள பண்டைய வண்டல் பாறைகளை ஆய்வு செய்துள்ளனர்.

advertisement

இதில் 650 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பே விலங்குகளின் பரிணாமம் தொடங்கியது என்பதைக் கண்டறிந்து உள்ளனர்.

அவுஸ்திரேலிய தேசியபல்கலைக்கழக இணைப்பேராசிரியர் ஜோசன் புரோக் இது குறித்து விளக்கமளிக்கையில்,

குறித்த பாறைகளை தூள் தூளாக்கி அதில் இருந்து பண்டைய உயிரினங்களின் மூலக்கூறுகளை பிரித்தெடுத்தோம். இந்த மூலக்கூறுகள் உண்மையில் இது 650 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் மாறியதாக நமக்குத் தெரிவிக்கிறது.

இது சுற்றுச்சூழல் புரட்சியாக உள்ளது. இந்த மாற்றம் எழுச்சி பூமியின் வரலாற்றில் மிகவும் ஆழ்ந்த சுற்றுச்சூழல் புரட்சிகளில் ஒன்று என தெரிவித்துள்ளார்.

மேலும் இது நடப்பதற்கு முன்பு பூமியில் 50 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு வியத்தகு நிகழ்வு நடந்துள்ளது. இது ஒரு பனிப்பொழிவாக நிகழ்ந்து பூமியை 50 மில்லியன் ஆண்டுகளாக முடக்கியது.

பனி உலகளாவிய அளவில் தீவிரமாக வெப்ப மூட்டப்பட்ட போது உருகி ஆறுகளாக ஓடி கடலில் ஊட்டசத்துக்களை தோற்றுவித்தன.

கடலில் மிக அதிக அளவு ஊட்டச்சத்துக்கள் உருவாகின. இது ஆதிக்கம் செலுத்தும் கடல்களில் இருந்து மிகவும் சிக்கலான வாழ்க்கை வாழ்ந்த உலகிற்கு பாக்டீரியா மூலம் மாற்றபட்டது.

உணவு வலையின் அடிப்பகுதியில் உள்ள இந்த பெரிய மற்றும் சத்துள்ள உயிரினங்கள் சிக்கலான சுற்றுச்சூழல் பரிணாம வளர்ச்சிக்கு தேவையான ஆற்றலை வழங்கியுள்ளன.

அதிகரித்து வரும் பெரிய மற்றும் சிக்கலான விலங்குகள், மனிதர்கள் உள்பட, பூமியிலேயே உருவாக முடியும் என ஜோசப் புரோக் தெரிவித்துள்ளார்.

மேலும் விஞ்ஞானம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்