பூமிக்கு அருகே மிகப்பெரிய விண்கல்: நாசா முக்கிய அறிவிப்பு

Report Print Basu in விஞ்ஞானம்
0Shares
0Shares
lankasrimarket.com

மிகப்பெரிதான விண்கல் ஒன்று பூமியைக் கடந்து செல்லும் என அமெரிக்க விண்வெளி ஆய்வு மையம் நாசா தெரிவித்துள்ளது.

நாசாவின் கணக்கீட்டின்படி 4.4 கிமீ அளவு கொண்ட ப்ளாரன்ஸ் என்ற விண்கல் எதிர்வரும் செப்டம்பர் 1-ம் திகதி பூமியைக் கடந்து செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், இதனால் பூமிக்கு ஆபத்து எதுவுமில்லை என்று நாசா குறிப்பிட்டுள்ளது.

இந்த விண்கல் 7 மில்லியன் கிமீ தொலைவில் பூமியைப் பாதுகாப்பாகக் கடக்கும், பூமியை இவ்வளவு நெருக்கமாகக் கடக்கும் விண்கல் இந்த ப்ளாரன்ஸ் விண்கல்லாகவே இருக்கும் என்று நாசா தெரிவித்துள்ளது.

இதனால் இந்த விண்கல்லை ஆய்வு செய்ய விஞ்ஞானிகளுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. ப்ளாரன்ஸ் பூமியைக் கடந்து செல்லும் போது அதன் உண்மையான அளவும், விண்கல்லின் 10மீ வரையில் சிறிய அளவிலான சிறிய மேற்புறத் தகவல்கள் கிடைக்கும் என்றும் விஞ்ஞானிகள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

1890-க்குப் பிறகு விண்கல் ஒன்று பூமிக்கு இவ்வளவு நெருக்கமாகக் கடந்து செல்கிறது. 2,500 வரை இந்த விண்கல் மட்டுமே இவ்வளவு நெருக்கமாகச் சென்ற விண்கல்லாகவும் இருக்கும் என நாசா தெரிவித்துள்ளது.

மேலும் விஞ்ஞானம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்