சூரிய கிரகணத்தைப் படம்பிடிக்க 80 ஆயிரம் அடி உயரத்தில் பலூன்கள்

Report Print Arbin Arbin in விஞ்ஞானம்
0Shares
0Shares
lankasrimarket.com

சூரிய கிரகணத்தைப் படம்பிடித்து நேரலையில் காண்பிக்க 80 ஆயிரம் அடி உயரத்தில், கமெராக்கள் பொருத்தப்பட்ட 50 பலூன்களை பறக்கவிட அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் திட்டமிட்டுள்ளனர்.

வரும் 21-ஆம் திகதி தென்பட இருக்கும் முழுச் சூரிய கிரகணத்தைப் படம் பிடிப்பதற்காக அதிக உயரத்தில் பறக்கும் பலூன்களைப் பயன்படுத்த அமெரிக்க விஞ்ஞானிகள் திட்டமிட்டுள்ளனர்.

இந்தத் திட்டத்தில் நாசாவுடன் மான்டனா மாநில பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களும் இணைந்து பணியாற்றி வருகின்றனர்.

சுமார் 80 ஆயிரம் அடி உயரத்தில் பறக்கும் 50 பலூன்கள் இதற்காகப் பயன்படுத்தப்பட இருக்கின்றன. முதல் முறையாக இந்தக் காட்சி இணையத்தில் நேரலையாக ஒளிபரப்பாக இருக்கிறது.

சூரிய கிரகணத்தின் நிழலானது அமெரிக்காவின் ஓரிகன் மாநிலத்தில் இருந்து தெற்கு கரோலினா மாநிலத்தை நோக்கி மணிக்கு சுமார் 2400 கிலோ மீற்றர் வேகத்தில் பயணிக்கும் என மதிப்பிடப்படுகிறது.

மேலும் விஞ்ஞானம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்