பகலில் குட்டி தூக்கம் ஆரோக்கியமானதா?

Report Print Peterson Peterson in விஞ்ஞானம்
0Shares
0Shares
lankasrimarket.com

பகல் நேரத்தில் குறிப்பிட்ட சிறிது நேரம் தூங்கினால் உடல் உறுப்புகள் சீராக இயங்குவதுடன் மூளையும் சுறுசுறுப்பாக செயல்படும் என ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

இரவு முழுவதும் தூங்கிவிட்டு காலை எழும்போது உடல் மிகவும் சுறுசுறுப்பாகவும் மனம் தெளிவாகவும் இருக்கும்.

ஆனால், மதிய உணவிற்கு பின்னர் உடல் ஒரு சோர்வு நிலைக்கு செல்லும். இதனை தவிர்த்து உடலை மீண்டும் சுறுசுறுப்பாக வைக்க உதவுவது தான் பகல் நேர குட்டி தூக்கம்.

பகல் நேரத்தில் தூங்குவதற்கு பலரும் நேரம் காலம் பார்க்காமல் தூங்குகின்றனர். இது முற்றிலும் தவறானது ஆகும்.

பகல் நேரத்தில் சரியாக 3 மணிக்கு தான் குட்டி தூக்கம் போட வேண்டும். அதுவும், 20 முதல் 30 நிமிடங்கள் மட்டுமே தூங்க வேண்டும்.

ஏனெனில், பிற்பகல் 3 மணியளவில் circadian எனப்படும் ரிதம் குறைய தொடங்குவதால் அந்த நேரத்தில் குட்டி தூக்கம் போட வேண்டும்.

30 நிமிடங்களுக்கு மேல் தூங்கினால் உடல் சோம்பல் ஏற்படுவதுடன் உடனடியாக அடுத்தடுத்த வேலைகளை கவனிக்க முடியாது.

அதே சமயம், பகலில் நீண்ட நேரம் தூங்கினால் இரவில் தூக்கம் வராமல் நீண்ட நேரம் போராட வேண்டிய நிலை ஏற்படும். இதனால் உடல் ஆரோக்கியம் பாதிக்கும்.

பகலில் 30 நிமிடங்கள் மட்டுமே தூங்கினால் உடல் எப்போதும் விழிப்பாக இருக்கும். நினைவாற்றல் அதிகரிக்கும், வேலையில் கவனம் அதிகரிப்பதுடன் வேலையில் தவறும் நிகழாது.

பகலில் சிறிது நேரம் தூங்குவது ஆரோக்கியமானது என்பதனால் கூகுள், உபேர் போன்ற பெரிய நிறுவனங்கள் தங்களது ஊழியர்களுக்கு பகலில் தூங்க அனுமதி வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் விஞ்ஞானம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்