செவ்வாய் கிரகத்தில் உயிர் வாழ ஆக்சிஜன் அமைப்பு: நாசாவின் சூப்பர் திட்டம்

Report Print Raju Raju in விஞ்ஞானம்
0Shares
0Shares
Cineulagam.com
advertisement

உயிரினங்கள் வாழ்வதற்கு அவசியமான ஆக்சிஜனை செவ்வாய் கிரகத்தில் உருவாக்க நாசா திட்டமிட்டுள்ளது.

செவ்வாய் கிரகத்தில் சுமார் 360 கோடி ஆண்டுகளுக்கு முன்னர் பூமியை போலவே உயிரினங்கள் செழிப்பாக வாழ்ந்துள்ளன.

advertisement

அதன்பின்னர் செவ்வாயில் மிகப்பெரிய விண்கல் மோதிய காரணத்தால், அங்கு வாழ்ந்த அனைத்து உயிரினங்களும் அழிந்து விட்டதாக நம்பப்படுகிறது.

செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள் மீண்டும் வாழ முடியுமா என பல விஞ்ஞானிகள் ஆராய்ச்சிகள் நடத்தி வருகிறார்கள்.

முக்கியமாக நாசா விண்வெளி நிறுவனம் வெகுகாலமாக கியூரியாசிட்டி என்ற விண்கலம் மூலம் செவ்வாய் கிரகத்தில் ஆராய்ச்சி நடத்தி வருகிறது.

பொதுவாக உயிரினங்கள் வாழ ஆக்சிஜன் முக்கியமாகும், பூமியில் 21 சதவீதம் ஆக்சிஜன் உள்ளது.

ஆனால் செவ்வாய் கிரகத்தில் 0.13 சதவீத ஆக்சிஜன் மட்டுமே உள்ளது, எனவே உயிரினங்கள் வாழ மிகவும் அவசியமான ஆக்சிஜனை செவ்வாய் கிரகத்தில் உருவாக்க நாசா மையம் திட்டமிட்டுள்ளது.

இதற்காக செவ்வாய் கிரகத்துக்கு 2020-ம் ஆண்டில் ஆக்சிஜனை உற்பத்தி செய்யும் பக்டீரியா அல்லது பாசி இனங்களை விண்கலன் மூலம் நாசா அனுப்பவுள்ளது.

இதன் மூலம் செவ்வாய்கிரகத்தில் மனிதர்கள் வாழக்கூடிய சூழ்நிலை ஏற்படும் என தெரிகிறது.

மேலும் விஞ்ஞானம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்