உலகிலேயே அதிக வலிமை கொண்ட மின்காந்தத்தை உருவாக்கி விஞ்ஞானிகள் சாதனை!

Report Print Givitharan Givitharan in விஞ்ஞானம்
0Shares
0Shares
lankasrimarket.com

பொருட்களை கவரக்கூடிய தன்மையை உடைய வகையிலான உலகின் அதிக வலிமை கொண்ட மின்காந்தம் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த காந்தமானது National High Magnetic Field ஆய்வுகூடத்தில் பணியாற்றும் விஞ்ஞானிகளால் உருவாக்கப்பட்டுள்ளது.

சுமார் இரண்டரை வருட உழைப்பிலும், 3.5 மில்லியன் டொலர்கள் செலவிலும் இக் காந்தம் முழுமையடைந்துள்ளது.

இக் காந்தமானது எதிர்காலத்தில் மருத்துவ ஆராய்ச்சி, இரசாயன ஆராய்ச்சி மற்றும் குவாண்டம் கம்பியூட்டர் தொழில்நுட்பம் என்பவற்றிற்றும் பயன்படும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.

குறித்த காந்தம் செயற்படுவதற்கு 32 மெகாவாட் உடைய நேரோட்ட மின்னோட்டம் வழங்கப்பட வேண்டும்.

இந்த மின்னோட்டமானது 21,500 கேத்தல்களை கொதிக்க வைப்பதற்கு சமனாகும்.

மேலும் விஞ்ஞானம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்