மதிய உணவுக்கு பின்னர் பணிபுரிபவர்களுக்கு காத்திருக்கும் ஆபத்து!

Report Print Givitharan Givitharan in விஞ்ஞானம்
0Shares
0Shares
lankasrimarket.com

அலுவலகங்களில் காலை நேரம் பணிக்கு வருபவர்கள் சுறுசுறுப்பாகவே காணப்படுவார்கள்.

ஆனால் மதியநேர உணவு உண்ட பின்னர் அவர்களின் சுறுசுறுப்பு மங்கிவிடும். இதனால் பணியில் மந்தம் மற்றும் தவறுகள் அதிகளவில் ஏற்படும்.

இவ்வாறான கசப்பான அனுபவங்கள் பலருக்கு ஏற்பட்டிருக்கும்.

இதற்கான காரணம் புதிய ஆய்வு ஒன்றின் ஊடாக கண்டறியப்பட்டுள்ளது.

மனித உடலானது ஒரு சந்தத்திற்கு ஏற்பவே நாள்தோறும் தொழிற்படுகின்றது.

இதற்கிடையில் நாள்தோறும் பிற்பகல் இரண்டு மணியளவில் உடலின் செயற்பாடு மந்த நிலையை நோக்கி நகர்கின்றது.

இது தொடர்பில் Blood Oxygen Level Dependent (BOLD) Functional Magnetic Resonance Imaging (FMRI) தொழில்நுட்பத்தின் அடிப்படையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த ஆய்வினை அவுஸ்திரேலியாவில் உள்ள தொழில்நுட்பத்திற்கான Swinburne பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்டுள்ளனர்.

உடலின் சந்தத்திற்கு அமைய மதியத்தின் பின்னர் ஓய்வு தேவைப்படுவதே இவ்வாறான மந்தநிலைக்கு காரணம் என தெரிவித்துள்ளனர்.

எனினும் இந்த நேரங்களில் தண்டனைகள் வழங்குவதற்கு பதிலாக வெகுமதிகள் வழங்கும்போது உண்டாகும் அதிர்ச்சியினால் உடலின் சந்தம் மாற்றப்படுகின்றது.

இதனால் தொடர்ச்சியாக பணியாளர்களை சுறுசுறுப்பாக செயற்பட வைக்க முடியும் எனவும் தெரிவித்துள்ளனர்.

மேலும் விஞ்ஞானம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்