சூரிய கிரகணம் தொடர்பில் ஆச்சரியம் தரும் புகைப்படத்தினை வெளியிட்டது நாசா

Report Print Givitharan Givitharan in விஞ்ஞானம்
0Shares
0Shares
lankasri.com
advertisement

பூமியிலிருந்து பார்க்கும்போது சூரியன் ஆனது நிலாவுக்கு பின்புறமாக மறைவது சூரிய கிரகணம் எனப்படும்.

இதன்போது பூமி, நிலா மற்றும் சூரியன் என்பன ஒரே நேர்கோட்டில் காணப்படும்.

advertisement

இதனை வெற்றுக்கண்ணால் பார்ப்பது ஆபத்தை விளைவிக்கும் என்பதால் போலார் கமெராக்கள் மற்றும் சாதாரண கமெராக்கள் என்வற்றினால் பார்க்க முடியும்.

இது தொடர்பான புகைப்படங்களையும் பார்வையிட்டிருப்பீர்கள்.

ஆனால் முதன் முறையாக அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு மையமான நாசா அகச்சிவப்பு (Infrared) கதிர்களின் உதவியுடன் புகைப்படங்களை எடுத்துள்ளது.

இப் புகைப்படங்கள் வழமைக்கு மாறான விதத்தில் மிகவும் கண்கவர் வடிவங்களில் காணப்படுகின்றன.

அத்துடன் அதி வேகம் கொண்ட கட்புலனாகும் கதிர்களை பயன்படுத்தியும் புகைப்படங்கள் எடுத்துள்ளனர்.

இதற்காக Southern Research's Airborne Imaging and Recording Systems (AIRS) மற்றும் DyNAMITE தொலைகாட்டிகளை உபயோகித்துள்ளனர்.

மேலும் விஞ்ஞானம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்